Close up shot of girl hands working in home kitchen and preparing vegetables for winter in vacuum containers.
How to Preserve Vegetables : கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தொடர்ந்து பல முறை வெளியில் செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் காய்கறிகளையும் பிற உணவுப் பொருட்களையும் சேமித்து வைக்க நேரிடும். வாங்கும் போது அவைகள் புதியது தானா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது கூட காய்கறிகளும், மற்றும் பிற உணவுப் பொருட்களும் உலர்ந்தோ அல்லது அழுகியோ நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே வாங்கிய அனைத்தையும் ஃப்ரிட்ஜில் வைப்பது சரியாக இருக்காது. ஆகையால் பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட காலத்திற்கு பாதுகாத்து, ஃப்ரெஷ்ஷாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிட சில ஐடியாக்களை தருகிறோம்.
ப்ரோக்கோலி, பட்டாணி, மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை 30 விநாடிகள் தண்ணீரில் கொதிக்க வைக்க பரிந்துரைக்கிறோம். கேரட்டுகளை ஃப்ரீஸ் செய்வதற்கு முன்பு நறுக்கிக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
இலை காய்கறிகளை சுருட்டவும்
இலை காய்கறிகளை ஸ்டோர் செய்வதற்கு முன், முதலில் அவற்றை நன்றாக அலசவும், பின்னர் உலர்த்தவும். ஈரப்பதத்தை உறிஞ்சும்படி டிஸ்யூ பேப்பரில் சுருட்டி, அவற்றை காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும்.
ஊறுகாய்
ஊறுகாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க வினிகர் அல்லது காய்கறி எண்ணெயில் அவற்றை சேர்க்க வேண்டும். கடுகு, பூண்டு, இலவங்கப்பட்டை அல்லது கிராம்பு போன்ற ஆண்டிமைக்ரோபியல் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களையும் அதில் நீங்கள் சேர்க்கலாம். இரைச்சி, வெள்ளரி, பீட்ரூட், பெல் பெப்பர்ஸ், தக்காளி, காளான்கள் போன்றவற்றையும் நீங்கள் ஊறுகாயாக செய்யலாம்.
ஜூஸ்
பழங்கள் கெட்டுவிடாமல் இருக்க, அவற்றை ஜூஸ் செய்து காற்று புகாத கண்ணாடி பாத்திரங்களில் சேமித்து, குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். வாழைப்பழங்களை அப்படியே குளிர்சாதன பெட்டியில் சேமித்துக் கொள்ளலாம். அதன் தோல் பழுப்பு நிறமாக மாறினாலும், பழம் உண்ணக்கூடியதாக இருக்கும்.
பால், பால் உணவுகளை குளிர்சாதன பெட்டியின் உட்புறம் வைக்கவும்
பால் மற்றும் பிற பால் உணவுகளை ஃப்ரிட்ஜ் டோரில் சேமிப்பதை விட, குளிர்ச்சியாக இருக்கும் உட்புறம் சேமிக்க வேண்டும். டோரில் வெப்பநிலை அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை திறக்கும் போது சூடான காற்றையும் வெளிப்படுத்துகிறது. இதனால் பாக்டீரியாக்கள் வளர்ந்து பால் கெட்டுப் போகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அறை வெப்பநிலையில் வைக்க வேண்டிய பொருட்கள்
தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை அறை வெப்பநிலையில், சூரிய ஒளி படாமல் வைத்திருக்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"