Advertisment

கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கர்ப்ப காலத்தில்  பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பக காலத்தில் அதிக  கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்கள் செய்யும் எந்த ஒரு தவறு குழந்தையை பாதிக்ககூடாது என்பதில் மிகுந்த கவனம் தேவை. பழங்கள், காய்கறிகள் எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சிறந்த உணவு என்றாலும், கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான உணவுப் பொருள்கள் இருக்கின்றன.

Advertisment

இரு  உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிடச் சொல்கிற அறிவுரையின் பேரில் கண்டதையும் சாப்பிட்டுக் குழந்தைக்கு நல்லது செய்யாது என்பதை முதலில் பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது முற்றிலும் தவறு.

பெண்கள் கர்ப்ப காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1.  உப்பு அதிகமுள்ள உணவுகளை உண்பது கர்ப்பகால ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

2. பேரிச்சை பழத்தில் அதிக அளவிலான இயற்கை சர்க்கரை நிரம்பியுள்ளது. கர்ப்ப கால சிக்கலை தவிர்க்க, நீங்கள் இதை கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும்.

3. எப்போது பார்த்தாலும் காபியை மட்டுமே குடித்துக்  கொண்டிருப்பவர்களுக்கு அதீத கஃபைன் சேர்க்கை, கருவை பாதிக்கக்கூடும்.

4. கர்ப்ப காலத்தில் பெண்கள் புகையிலை போடக்கூடாது. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கம் உள்ள பெண்கள் அதை உடனடியாக நிறுத்துவது நலம்.

5. கர்ப்பகாலத்தில் வாழைப்பழத்தை தவிர்த்து கொள்வது சிறந்தது.

6. அசைவ உணவுகளை வாங்குவதில் தொடங்கி, சுத்தப்படுத்துவது, சமைப்பது வரை ஒவ்வொரு விஷயமுமே கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

7. திராட்சை கொடிகள் மீது தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திராட்சைகளை தவிர்க்க வேண்டும்

8. கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின்  வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.

9. தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள், பாக்கெட் உணவுகள், ஜூஸ் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது

 

Health Tips Beauty Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment