கொரோனா தொற்று நோய் காலத்தில் அனைவரும் உச்சரிக்கு ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள் என்பதுதான். உங்களுடைய சமையலறையில் மழைக்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், தடுமன், ஜுரம் போன்ற உடல்நல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் அதே வேளையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பல பொருட்கள் நிறைய உள்ளது.
மிளகு தூளுடன் மஞ்சள் பாலின் அற்புதமான நன்மைகள் குறித்து பலருக்கும் தெரியும். அதனால், இன்று மற்றொரு சக்திவாய்ந்த வீட்டு வைத்தியமான பூண்டு பால் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த பூண்டு பால் உங்களில் பலருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும், இந்த பூண்டு பாலின் நன்மைகள் என்ன, அதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பூண்டு பால் அழற்சி நீக்கும் கலவைகள் நிறைந்தது. பூண்டு பாலை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மழைக்காலத்தில் ஏற்படக் கூடிய உடல்நலப் பிரச்சினைகளைத் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி, மலச் சிக்கல் போன்றவற்றுக்கு சூப்பரான தீர்வாகவும் உள்ளது.
இந்த பூண்டு பால் இரவில் தூங்குவதற்கு செல்லும் முன் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.
ஆயுர்வேத மருத்துவர் ஷியாம் விஎல் கூறுகையில், “இடுப்பு வலி, கை கால் வலி, வயிற்று உப்பசம், மலச்சிக்கல், முதுகு வலி, நாள்பட்ட மற்றும் தொடர்ச்சியான காய்ச்சல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு பூண்டு பால் ஆயுர்வேதத்தில் மிகவும் பயனுள்ள தீர்வாக உள்ளது” என்று கூறுகிறார்.
டாக்டர் ஷியாம் கருத்தப்படு, நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய செயலில் உள்ள பொருட்கள் கொதிக்கும் பாலுக்கு மாற்றப்படுகின்றன. பால் பூண்டின் உஷ்ணத்தையும் வீரியத்தையும் குறைக்கிறது என்று அவர் கூறுகிறார்.
பூண்டு பால் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
1¼ கப் - பால்
4 - பூண்டு பல்
2 தேக்கரண்டி - பனை வெல்லம்
மஞ்சள் (விரும்பினால்)
செய்முறை:
*தோல் உரித்த பூண்டு பல் 4 , சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
*பாலை கொதிக்கவையுங்கள்.
*நறுக்கப்பட்ட அல்லது நசுக்கிய பூண்டு துண்டுகளைச் சேர்த்து 5-7 நிமிடங்கள் லேசாக கொதிக்க விடுங்கள். *பின்னர், நீங்கள் விரும்பினால் மஞ்சளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
*பூண்டு மென்மையாகும் வரை வேகவைக்கவும். அதனுடன் பனை வெல்லத்தை சேர்த்து, அது முற்றிலும் கரையும் வரை வேகவையுங்கள்.
*பருகுவதற்கு சூடாக பரிமாறவும்!
பூண்டு பாலை இப்படி தயாரித்தால் வாயில் மோசமான பூண்டு வாசனையை ஏற்படுத்தாது.
பூண்டு பால் யாரெல்லாம் சாபிடலாம்?
டாக்டர் ஷியாமின் கருத்துப்படி ஒருவர் பூண்டு பால் சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்
*கோடை காலத்தில்
*உங்களுக்கு நெஞ்செரிச்சல்/இரைப்பை/வயிற்றுப் புண் இருந்தால் எச்சரிக்கையாக பூண்டு பாலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.