/tamil-ie/media/media_files/uploads/2019/11/Pine-nut-soup.jpg)
Garlic Pine Nut Soup Tamil Recipe
Garlic Pine Nut Soup Tamil Recipe : சூப்பில் வகை வகையாக சாப்பிடுவதைத்தான் அனைவரும் விரும்புவீர்கள். ஒரே மாதிரியான சூப் தினம் சாப்பிட முடியாது. எனவே பூண்டு தாளித்து பாதாம் பருப்பு மற்றும் கோழி வேக வைத்த தண்ணீர் வெள்ளை ஒயின் சேர்த்து செய்யப்படும் சூடான சூப்பை சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்
5 பாதாம்
10 பூண்டு
1 பிரிஞ்சி இலை
15 gms கொத்தமல்லி
ஒரு சிட்டிகை ஜாதிக்காய்
1 முட்டைக்கரு
4 கப் சிக்கன் பிராத்
2 வெள்ளை நிற பிரட்
சுவைக்க உப்பு
1/2 கப் ஹெவி க்ரீம்
1 மேஜைக்கரண்டி வெண்ணெய்
சுவைக்க உப்பு
30 மில்லி லிட்டர் வெள்ளை ஒயின்
ஒரு சிட்டிகை மிளகு
செய்முறை
முதலில் பூண்டை சுத்தம் செய்து வேக வைக்க வேண்டும். பின் அதை, வெள்ளை ஒயின், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து வறுக்க வேண்டும்.
இதையடுத்து பாதாமின் தோலை நீக்கி, வறுத்த பூண்டுடன் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சூடான கடாயில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள பூண்டு மற்றும் பாதாமை சேர்க்க வேண்டும். இப்போது சிக்கன் வேகவைத்த தண்ணீரை சேர்க்க வேண்டும். தேவையான பொருட்களில் சொல்லப்பட்ட ஹெர்ப்ஸை நூலில் மொத்தமாக கட்டி சூப்பின் உள்ளே போட்டு விடவும்.
நன்றாக சூப் கொதித்தவுடன், முட்டையின் கரு மற்றும் க்ரீமை ஒன்றாக ஊற்றி கலக்கி விட வேண்டும். பின் இந்தக் கலைவையை சூப்பில் ஊற்றி நன்றாக கிளறி விட வேண்டும். தரமான சத்தான பூண்டு மற்றும் பைன்நட் சூப் ரெடி.
மேலும் படிக்க : இந்த இளநீர் சூப் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.