இந்த இளநீர் சூப் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும்!

தக்காளி இளநீர் கிளியர் சூப் சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு இருக்காது.

Tender Coconut Tomato Clear Soup recipe in Tamil : தக்காளி இளநீர் கிளியர் சூப் சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு இருக்காது. ஆனால் எப்போதும் ஆர்டர் செய்து வாங்கி உண்டு போர் அடிக்கிறது என்று அலுத்துக் கொள்கின்றீர்களா? உங்களின் கவலை எங்களுக்கு புரிகிறது.  எனவே வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த சூப்-பை எப்படி செய்வது என்று அறிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

தக்காளிச் சாறு – கால் கப்,
இளநீர் – 2 கப்
(அதிக இனிப்பு இல்லாத இளநீராக இருக்க வேண்டும்),
இஞ்சிச் சாறு – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, மிளகுத்தூள் தேவைக்கேற்ப
உப்பு – சிறிதளவு.
நெய் – ஒரு டீஸ்பூன்,
பூண்டு – 2 பல் (விருப்பப்பட்டால்).
கடுகு-அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்-அரை டீஸ்பூன்
சீரகம்-அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்

ஈசியான செய்முறை

ஒரு கடாயில், தக்காளிச் சாறு, இளநீர், இஞ்சிச் சாறு, உப்பு சேர்த்து நுரை வரும் வரை கிளற வேண்டும். பின் கடுகு,பெருங்காயத்தூள்,சீரகம், வெந்தயம் போட்டு தாளித்து சேர்த்து இறக்கி,அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து சுடசுட சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க : ருசியான காளான் சூப் சாப்பிடத்தயாரா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close