garlic recipes in tamil: தென்னிந்திய உணவு வகைகளில் இட்லி, தோசை போன்ற உணவுகள் பிரபலமான ஒன்றாக உள்ளது. நம்முடைய வீடுகளில் தயார் செய்யப்படும் இட்லி, தோசைகளுக்கு சட்னி, சாம்பார் செய்ய வேண்டும் என்பதற்காகவே தனி நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. மேலும், அலுவலகம் அல்லது மற்ற வேலைகளுக்கு செல்ல முயலும் நம்மால் அவற்றுக்கு ஏற்ற மற்றும் முறையான சைடிஷ்களை தயாரிப்பதில் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கிறது.
இந்த கவலையையும், கஷ்டத்தையும் போக்குவதற்காகவே உங்களுக்கான சிம்பிள் மற்றும் சுவையான சைடிஷ் குறித்த டிப்ஸ்களை இங்கு பரிந்துரை செய்துள்ளோம். அந்த வகையில், இட்லி, தோசைகளுக்கு ஏற்ற பூண்டு பொடி குறித்து இன்று பார்க்க உள்ளோம்.

பூண்டை விரும்பாதவர்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு அருமையான சுவை கொண்ட பூண்டு பொடியை எப்படி தயார் செய்வது என்று இப்போது பார்க்கலாம்.
பூண்டு பொடி செய்யத் தேவையான பொருட்கள்
பூண்டு – 1/4 கப்
தேங்காய் துருவியது – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – காரத்துக்கு ஏற்ப
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
பூண்டு பொடி செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து சுமார் 2 நிமிடமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளவும்.
பின்னர் அவற்றுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதன்பிறகு, அடுப்பை அணைத்து தேங்காய் சேர்த்து கிளறி ஆறவிடவும்.
இவை நன்கு ஆறியதும் மிளகாய் தூள், உப்பு, பூண்டு, தேங்காய் ஆகியவற்றை மிக்சியில் இட்டு நொறுநொறுப்பாக அரைத்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான மற்றும் சுவையான பூண்டு பொடி தயாராக இருக்கும்.
இவற்றை காற்று புகாமல் ஒரு பாட்டிலில் சேர்த்து வைத்தால் ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள் மக்களே!!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“