Simple cooking hacks for ginger-garlic paste in tamil: சமைக்கத் தொடங்கியவர்களுக்கு எளிய சமையல் ஹேக்குகள் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். எனினும், சமைக்கும் ஒவ்வொருவரும் தனித்துவமான பண்பு இருக்கும். மேலும் மசாலா சேர்ப்பதில் ஒரு ஸ்டைல் இருக்கும். இதை அனைவருமே ஒப்புக்கொண்டுள்ளனர்.
இப்படி சமைக்கும் அனைவராலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகும். சிலர் கடைகளில் விற்கப்படும் பேஸ்ட்களை விரும்புவாரா இருப்பர். ஆனால் ஒரு சிலரோ வீட்டில் அரைக்கும் பேஸ்ட்யை விரும்புவர். இருப்பினும், வீட்டில் ஒவ்வொரு முறையும் பேஸ்ட் தயார் செய்ய அலுப்பு ஏற்படும்.
இதற்கெனவே சில எளிய ஹேக்களை நாங்கள் உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இது எளிதான ஒன்று மட்டுமல்லாமல், ஐந்து-ஆறு மாதங்கள் வரை உபயோகிக்கும் அளவுக்கு பேஸ்ட்டை புதியதாக வைத்திருக்கும் புதுமையான ஹேக் ஆகும்.
இந்த வித்தியாசமான ஹேக்குகளுக்கான செயல்முறையை படிப்படியா விவரிக்கும் வீடியோவை "ஃபுட் ப்லாகர் ஆர்த்தி மதன்" தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தேவையான பொருட்கள்
150 கிராம் - இஞ்சி
250 கிராம் - பூண்டு
உப்பு
2-3 டீஸ்பூன்-எண்ணெய்
செய்முறை
முதலில் இஞ்சியை சுத்தம் செய்து உரித்து மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். பிறகு பூண்டை சுத்தம் செய்து உரிக்கவும்
இதன் பிறகு இஞ்சியை அரைக்கவும். தொடர்ந்து பூண்டை அரைக்கவும். அவற்றோடு உப்பு, எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
நீங்கள் மனதில் கொள்ள வேண்டியவை?
*இஞ்சியின் அளவு குறைவாக இருக்க வேண்டும், ஏனெனில் அது வலுவான சுவை கொண்டது.
*இஞ்சியை மெல்லிய துண்டுகளாக வெட்டுவதை உறுதி செய்து கொள்ளவும், அதனால் அரைக்க எளிதாக இருக்கும். ஈரப்பதம் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
*தண்ணீரை பயன்படுத்த வேண்டாம்.
எப்படி சேமிப்பது?
*பேஸ்டை ஒரு கண்ணாடி பாட்டிலில் (கழுவி நன்கு உலர்ந்த) வைக்கவும். இது குளிர்சாதன பெட்டியில் ஐந்து மாதங்கள் வரை இருக்கும்,
*பாட்டிலை மூடி காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
"உப்பு மற்றும் எண்ணெய் இஞ்சி பூண்டு விழுது நீண்ட காலம் நீடிக்க உதவுகிறது" என்று ஃபுட் ப்லாகர் ஆர்த்தி மதன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil