நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல்; இப்படி செஞ்சு அசத்துங்க!

Inji Thokku in tamil: ஏராளமான நன்மைகளை தாராளமாக வழங்கி வரும் இஞ்சியில் எப்படி துவையல் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

Inji Thokku in tamil: ஏராளமான நன்மைகளை தாராளமாக வழங்கி வரும் இஞ்சியில் எப்படி துவையல் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ginger recipe in tamil: easy steps to make inji thuvaiyal recipe in tamil

Ginger recipe in tamil: நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய மசாலாக்களில் இஞ்சி முக்கியமான ஒன்றாக உள்ளது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி மற்றும் வீக்கத்தை போக்க உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றயாகும் இஞ்சி செயல்படுகிறது. இவை புற்றுநோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன.

Advertisment

தவிர, இவற்றை பெரும்பாலும் நமது உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால் இவற்றை மாத்திரை மற்றும் மிட்டாய் வடிவில் கூட பயன்படுத்தியும் வருகிறோம்.

இப்படி ஏராளமான நன்மைகளை தாராளமாக வழங்கி வரும் இஞ்சியில் எப்படி துவையல் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

இஞ்சி துவையல் செய்யத் தேவையான பொருட்கள்

Advertisment
Advertisements

நல்லெண்ணெய்
200 கிராம் -இஞ்சி (துண்டாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 100 கிராம்.
புளி - 50 கிராம்

தாளிக்க

நல்லெண்ணெய் - 250 மில்லி
கடுகு - 1 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன்
கருவேப்பிலை
உப்பு
வெல்லம் - 1 ஸ்பூன்

publive-image

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் ஒரு காடாய் எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றவும். பிறகு அதில் துண்டாக நறுக்கி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து பச்சை வசம் போகும் வரை நன்கு வதக்கவும்.

பிறகு அவற்றோடு, காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். இந்த கலவை நன்றாக ஆறிய பிறகு மிக்சியில் பேஸ்ட் போல அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் சூடானதும் இட்டு, முன்பு அரைத்து வைத்துள்ள இஞ்சி கலவையை சேர்க்கவும். இதன் பிறகு நன்றாக கொதிக்க ஆரம்பமாகும் போது அவற்றோடு தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

தொடர்ந்து கொதிக்க விடும் போது துவையல் திக்கான நிறத்திற்கு மாறி கெட்டியாக வரும், அதுவரை கொதிக்க வைக்கவும். பிறகு அதில் வெல்லம் சேர்த்து கிளறி கொதிக்க விட்டு கீழே இறக்கவும்.

நாம் கொதிக்க வைத்து கிளறி இஞ்சி துவையல் நன்றாக சுண்டி வந்தவுடன் அவற்றை ஆற வைத்து ஒரு டாப்பாவில் அடைத்து சுமார் 1 மாதத்திற்கு பயன்படுத்தலாம். அவ்வப்போது சூடு செய்து கொண்டால் சாப்பிடும் கூடுதல் சுவை தரும்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Healthy Food Tips Healthy Food Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tamil News 2 Healthy Food Kitchen

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: