Ginger recipes in tamil: நம்முடைய அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. தவிர கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகளும், எ, பி, சி போன்ற வைட்டமின்களும் காணப்படுகின்றன.
இஞ்சியின் ஆரோக்கிய பயன்கள்
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இஞ்சியை, தட்டி தேனீர் கொதிக்க வைக்கும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேனீர் பருகலாம். சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது.
சில சமையல் வகைகளில் இஞ்சியை மசித்துப் போட்டு செய்வார்கள். அதுபோன்ற உணவு வகைகள் வயிற்றைக் கெடுப்பதில்லை.
இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்திற்கு தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
இவ்வளவு நற்பயன்களை கொண்டுள்ள இஞ்சியில் எப்படி சுவையான இஞ்சித் தயிர் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
இஞ்சித் தயிர் செய்யத் தேவையான பொருட்கள்
அரைக்க
1/4 கப் புதிதாக நறுக்கப்பட்ட இஞ்சி
2 முதல் 4 கறிவேப்பிலை
2 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
1/3 கப் புதிதாக அரைத்த தேங்காய்
நன்கு மிக்ஸ் செய்ய
1 கப் வேர்க்கடலை தயிர்
1 தேக்கரண்டி சீரக தூள்
உப்பு (தேவையான அளவு)
1 நடுத்தர எலுமிச்சை சாறு
செய்முறை
முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அவற்றை தயிருடன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். தொடர்ந்து இந்த கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் அவற்றை இவற்றுடன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது சுவையான இஞ்சித் தயிர் ரெடியாக இருக்கும். அவற்றை உங்களது சாதம் மற்றும் கஞ்சியில் சேர்த்து ருசித்து மகிழவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.