Advertisment

குமட்டல், செரிமான பிரச்சனையை போக்கும் இஞ்சி சூப்… சிம்பிள் டிப்ஸ் இதுதான்!

Simple tips for ginger soup in tamil: இஞ்சி உங்கள் சருமம், முடி மற்றும் உடலுக்கு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளின் சக்தியாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ginger soup recipe in tamil: inji soup recipe making tamil

ginger soup recipe in tamil: நம்மிடையே ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் என இரு வகை உணவுகள் உள்ளன. ஆனால், உங்கள் நாளை ஆரோக்கியமாகத் தொடங்க விரும்பினால், உங்கள் சமையலறையிலே அதற்கான வாய்ப்பு உள்ளது. அது, உங்கள் சமையலறையில் எப்போதும் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த பொருட்களில் ஒன்றான "இஞ்சி" தான்.

Advertisment

இஞ்சி நமது வீடுகளில் பரவலாக விரும்பப்படுகிறது. அதை நாம் உணவுகளில் மட்டுமல்லாது தேநீரிலும் சேர்த்து பயன்படுத்தி வருகிறோம். இஞ்சி, உங்கள் உணவுகளுக்கு சுவையூட்டுவதைத் தவிர, பாரம்பரியமாக ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது.

இஞ்சி உங்கள் சருமம், முடி மற்றும் உடலுக்கு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளின் சக்தியாக உள்ளது.

publive-image

குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இவை உள்ளது. அஜீரணக் கோளாறுடன் தொடர்புடைய தலைசுற்றல், மயக்கம் ஆகியவற்றையும் இது குறைகிறது.

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால், ஷோகோல், ஜிங்கரோன் மற்றும் பல ஆவியாகும் கலவைகள் அழற்சி எதிர்ப்பிற்கு உதவுகின்றன. இவை இஞ்சிக்கு கடுமையான, வலுவான வாசனை மற்றும் சுவையை வழங்குகின்றன.

இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள இஞ்சியில் எப்படி சுவையான சூப் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

publive-image

இஞ்சி சூப் தயார் செய்யத் தேவையான பொருட்கள்

இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
சீரகம், கறிவேப்பிலை - தாளிப்பதற்கு

publive-image

இஞ்சி சூப் சிம்பிள் செய்முறை

முதலில் இஞ்சியை தோல் நீக்கிக் கொள்ளவும். பிறகு காய்ந்த மிளகாயை சுட்டு வைக்கவும்.

இதன்பின்னர், சின்ன உரலில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, சுட்ட மிளகாய், மிளகு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி, சேர்த்து அரைத்து கொள்ளவும்.

தொடர்ந்து, ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

பின்னர் அரைத்த கலவை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவை சற்று வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

இறுதியாக கொத்தமல்லி தழையை சேர்த்து கீழே இறக்கவும்.

இப்போது சுவையான மற்றும் சத்தான இஞ்சி சூப் தயாராக இருக்கும். அவற்றை பரிமாறி ருசிக்கலாம்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Healthy Food Food Receipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment