/tamil-ie/media/media_files/uploads/2019/10/Goa.jpg)
Goa tourism Sinquerim beach visit travel guide : சின்குவேரிம் பீச், மிகவும் புராதன வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இந்த கடற்கரை, வடக்கு கோவாவில் உள்ள கேண்டலிம் கடற்கரையிலிருந்து மிக அண்மையில் இருந்தாலும் பனாஜியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. மேலும் இங்கு குறைந்த அளவு தண்ணீரில் தான் விளையாட்டுகளில் ஈடுபட முடியும்.
அத்தோடு 50 அடி உயர அர்வேலம் நீர்வீழ்ச்சியும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றது. மேலும் அர்வேலம் அருவிக்கு அருகில் ருத்ரேஷ்வர் கோயிலும் உள்ளது. இந்த கடற்கரையில் இருக்கக்கூடிய குடிசைகளில் குறைந்த விலையில் மது கிடைக்கும்.அருமையான கோவான் உணவும் இங்கு உண்டு.
சின்குவேரிம் கடற்கரைக்குச் செல்லுபவர்களுக்கு, கேண்டலிம் பீச்சிலிருந்து வாடகை கார்கள் அல்லது ரிக்ஷா கிடைக்கும். மேலும் இங்கு செல்பவர்களுக்கு பனாஜி நகரிலிருந்து செல்லும் பேருந்து அல்லது வாடகை கார்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் பனாஜியில் வாடகைக்கு பைக் ஒன்றை எடுத்துக் கொண்டு சின்குவேரிம் கடற்கரையை சுற்றிப் பார்க்கலாம். மேலும் இங்குள்ள கேண்டலிம், அஞ்சுனா, பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கும் சுற்றுலாவாசிகளை ஈர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : அக்டோபர் 10 முதல் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.