தூக்கம் என்பது இன்றைக்கு மனிதனுக்கு மிக முக்கியமான மூன்று விஷயங்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையாக இருப்பதை பார்க்கிறோம். தூக்கம் என்னும் வார்த்தை நம்மில் பெரும்பாலோனோர் மறந்து போன வார்த்தையாக இருப்பதை இன்றைக்கு நாம் பார்க்கிறோம்.
நல்ல தூக்கத்திற்கு இரவு தூங்குவதற்கு முன்பு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உணவு சாப்பிட்டு விட வேண்டும். சாப்பிட்ட பிறகு மெதுவாக ஒரு 20 நிமிடம் நடக்க வேண்டும். தண்ணீர் அருந்தக்கூடிய பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். பின்னர் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டிவி, போன் போன்றவற்றை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இதெல்லாம் செய்து கூட தூக்கம் வரவில்லை என்றால் இந்த ஐந்து மூலிகைகளை பயன்படுத்தலாம். தூங்க உதவும் 5 மூலிகைகளை பற்றி பார்ப்போம்.
மூலிகைகள்:
அமுக்கரா
வல்லாரை
அதிமதுரம்
கடுக்காய்
சடாமாஞ்சில்
அமுக்கரா: உடல் மற்றும் மன ஆரோக்கியம், உடல் வன்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவும் இதனை சாப்பிடுவதன் மூலம் நல்ல தூக்கம் வரும். சூரணம், பொடி, மாத்திரை எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.
வல்லாரை: செறிவை மேம்படுத்தும் திறன் கொண்டவை. நினைவாற்றலை அதிகரிக்கிறது. மனதில் உண்டாகும் படபடப்பை குறைத்து தணிக்கிறது . நிம்மதியான தூக்கத்தையும் அளிக்கிறது.
சடாமாஞ்சில்: மனதுக்கு அமைதியையும், தளர்வையும் வழங்க கூடிய மூலிகை சடாமாஞ்சில். தூக்கமின்மை உள்ளவர்கள் இதனை எடுத்து கொண்டால் உடனடி பலன் கிடைக்கும்.
தூங்க உதவும் 5 மூலிகைகள் என்னென்ன? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் அவர்கள்!
இதேபோல அதிமதுரம் மற்றும் கடுக்காய் எடுத்து கொள்வதும் நல்ல தூக்கத்திற்கு உதவும். இதனை பொடியாக பால், தண்ணீருடன் சேர்த்து அல்லது டீ மாதிரியும் குடிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“