தற்போதைய தலைமுறையின் மிகப்பெரிய கவலை முடி உதிர்வு மற்றும் சர்க்கரை நோய் தான். வயது பேதங்களின்றி இந்த பிரச்சனை அனைவரிடமும் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக பிரத்தியேகமாக செய்யப்படும் பானம் குறித்து இதில் பார்க்கலாம்
இதற்கு தேவையானவை:
5 நெல்லிக்காய்,
பாகற்காய் சிறிய துண்டு
தேன் (சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது)
தண்ணீர்
5 நெல்லிக்காய்களை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதே போல், சிறிய துண்டு பாகற்காயை வெட்டி அதில் இருக்கும் விதைகளை நீக்கிவிட வேண்டும். இந்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்து எடுக்க வேண்டும். அதன் பின்னர், இதில் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து மீண்டும் முற்றிலுமாக அரைக்க வேண்டும்.
இதன் பின்னர், ஒரு கிளாஸில் 1 ஸ்பூன் தேன், கால் கிளாஸ் அரைத்து எடுத்த நெல்லிக்காய் மற்றும் பாகற்காய் ஜூஸ் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் இதில் தேன் கலக்காமல் குடிப்பது நல்லது. முடி வளர்ச்சிக்காக குடிப்பவர்கள் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“