பொதுவாக கீரைகளில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன. முக்கியமாக இரும்புச்சத்து, கால்சியம், மக்னீஷியம் மற்றும் பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் கீரைகளில் உள்ளது.
மேலும் நார்ச்சத்தும் கீரைகளில் இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கும் உடல் எடை குறைப்பிற்கும் இது சிறந்தது. அதேபோல செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலையும் தவிர்க்கிறது.
எனவே எப்படி ஆரோக்கியமான கீரை சாலட்டை தயாரிப்பதென்று பார்க்கலாம்?
தேவையானவை:
பாலக்கீரை - 1 கப்
ஃபெட்டா சீஸ் - 1/4 கப்
ஆப்பிள் -1
தக்காளி - 2
எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி சாறு - 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
வால்நட் - 1/3 கப்
வினிகர் - 2 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் கீரையை சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு மிக்ஸியில் இஞ்சி சாறு, வால்நட், ஆலிவ் எண்ணெய், வினிகர், எலுமிச்சை சாறு, மிளகு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். நறுக்கி வைத்துள்ள தக்காளி, கீரை, ஆப்பிள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, பின் அரைத்து வைத்துள்ள கலவையை அதன் மேல் ஊற்றி ஃபெட்டா சீஸ் தூவி சாப்பிடலாம்.