ஜிம்மில் திடீர் மாரடைப்பு: உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எச்சரிக்கை: காரணம் என்ன?

தொழில் ரீதியாக ஒரு ரியல் எஸ்டேட் முகவரான மோஹித், 180 கிலோ எடையுள்ள லெக் பிரஸ் (leg press) பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

தொழில் ரீதியாக ஒரு ரியல் எஸ்டேட் முகவரான மோஹித், 180 கிலோ எடையுள்ள லெக் பிரஸ் (leg press) பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
gym goer 2

மோஹித் சச்தேவா (40), டெல்லியின் லஜ்பத் நகரில் வசிப்பவர். அவரது உடற்பயிற்சிக் கூடத்தில் எடுக்கப்பட்ட படம்.

டெல்லியின் லஜ்பத் நகரில் வசிப்பவரான மோஹித் சச்தேவாவுக்கு (40) ஜூலை 9-ம் தேதி ஒரு வழக்கமான காலைப்பொழுது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் காலை 7.15 மணிக்கு உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வது வழக்கம். ஆனால், காலை 8.45 மணிக்கு, அரை மணி நேரத்திற்குப் பிறகு, அவரது வாழ்க்கை மாறியது. தொழில் ரீதியாக ஒரு ரியல் எஸ்டேட் முகவரான மோஹித், 180 கிலோ எடையுள்ள லெக் பிரஸ் (leg press) பயிற்சியை செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால், கதை அதோடு முடிந்துவிடவில்லை. அவர் உயிர் பிழைத்து, அந்த அனுபவத்தை சொல்ல உயிரோடு இருக்கிறார். ஏனென்றால், இதுபோன்ற சூழ்நிலையில் உதவக்கூடிய 8 நிமிடங்களுக்குள் அவருக்கு உதவி கிடைத்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

அவரது உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த நண்பர்கள், அவரை மெதாந்தா-மூல்சந்த் இதய மையத்திற்கு அழைத்துச் சென்றதாக தொலைபேசியில் அழைத்ததை அவரது மனைவி ரூபி சச்தேவா நினைவு கூர்ந்தார். “அவரைக் காப்பாற்றியது, உடற்பயிற்சிக் கூடத்தில் யாரோ அவருக்கு அளித்த இதய நுரையீரல் உயிரூட்டுதல் (Cardio-Pulmonary Resuscitation - CPR) சி.பி.ஆர்-தான்” என்று அவர் கூறுகிறார். மாரடைப்பின் போது இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டால் அல்லது மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் செல்ல முடியாத நிலையில், இந்த நெஞ்சு அமுக்குதல் மற்றும் வாய்வழி சுவாசம் அளிக்கும் செயல்முறை ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும். உண்மையில், நாட்டில் இளம் வயதினருக்கு ஏற்படும் திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு சி.பி.ஆர் பயிற்சி இல்லாததே முக்கிய காரணம்.

உடனடி சிகிச்சை எப்படி பலன் அளித்தது 

Advertisment
Advertisements

மோஹித் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, அவருக்கு இன்னும் நாடித்துடிப்பு இல்லை. அவருக்கு மேம்பட்ட சி.பி.ஆர், மின் அதிர்ச்சி அளிக்கப்பட்டது. நாடித்துடிப்பு திரையில் தோன்றியவுடன், அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டது. “திடீர் மாரடைப்பு ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது, ஏனென்றால் ஆக்ஸிஜன் கலந்த ரத்தம் இல்லாததால் மூளை இறக்கத் தொடங்குகிறது. அதன் பிறகு உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும்” என்று அவசர சிகிச்சை நிபுணர் டாக்டர் அப்பாஸ் அலி கத்தாய் கூறுகிறார்.

இதயத்துடிப்பு நிலைபெற்ற பிறகு, மெதாந்தா மூல்சந்த் இதய மையத்தின் இதய நோய் நிபுணர் டாக்டர் தருண் குமார், ரத்த அழுத்தத்தை அதிகரிக்க மருந்துகளை செலுத்தினார். ஒரு மின் இதயத்துடிப்பு வரைவு (ECG) மற்றும் படுக்கை அருகே செய்யப்பட்ட எக்கோகார்டியோகிராம் (echocardiogram) பிறகு, மருத்துவர்கள் ஆஞ்சியோகிராபி (angiography) செய்து, அவரது இதயத்தில் மூன்று ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருப்பதைக் கண்டறிந்தனர். “இரண்டு தமனிகள் முற்றிலும் அடைபட்டிருந்தன. சமீபத்தில் அடைபட்ட தமனியில் முதலில் ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) செய்தோம். இது, ரத்த நாளங்களை விரிவுபடுத்தும் ஒரு குறைந்த ஊடுருவல் செயல்முறை. பின்னர், ஒரு ஸ்டென்ட் (stent) என்ற வலைப்பின்னல் கருவியை உள்ளே வைத்தோம். இது, தமனிகளின் சுவர்கள் மீண்டும் குறுகாமல் தடுக்கும். இந்த செயல்முறை தமனிகளில் ரத்த ஓட்டத்தை மீட்டெடுத்த பிறகு, நோயாளி இதய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சுயநினைவு திரும்பியது. அவரது இதயம் மற்றும் சிறுநீரகங்களின் நிலையை சீர்குலைக்காமல் இருக்க, மீதமுள்ள தமனிகளைத் திறக்க மற்றொரு செயல்முறையை பின்னர் திட்டமிட்டோம்” என்று டாக்டர் குமார் கூறுகிறார்.

மோஹித்தின் மீண்டு வருதல் ஆச்சரியமாக இருந்தது. 24 மணி நேரத்திற்குள், செயற்கை சுவாசக்கருவி அகற்றப்பட்டது, மேலும், அவரது ரத்த அழுத்த மருந்துகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் வீட்டிற்குச் செல்லுமளவுக்கு நிலைபெற்றார். இப்போது அவர் தனது மீதமுள்ள தமனிகளைத் திறக்கும் செயல்முறைக்கு முன் இதயப் பராமரிப்பு நெறிமுறையைப் பின்பற்றி வருகிறார்.

இதய அடைப்பு திடீர் மாரடைப்பைத் தூண்டுமா?

ஒரு கரோனரி தமனியில் ஏற்படும் இதய அடைப்பு, இதயத் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது இதயத்தில் ஒரு ஆபத்தான மின் செயலிழப்பை ஏற்படுத்தி, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் இறுதியில் செயலிழப்பைத் தூண்டலாம். “மோஹித்தின் விஷயத்தில், அடைப்புதான் அவரது மாரடைப்பைத் தூண்டியது” என்று டாக்டர் குமார் கூறுகிறார்.

பெரும்பாலான உடற்தகுதி கொண்ட இளைஞர்கள், இதயக் கோளாறுகளை கண்டறியும் சோதனைகளை செய்யாமல் இருக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். இதயத் தசையின் தடிமன் அல்லது ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி (hypertrophic cardiomyopathy) போன்ற சில நிலைகள் பரம்பரை வழியாக வரலாம், சிலருக்கு மரபணு ரீதியாக ரத்தம் வேகமாக உறைவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், சிலருக்கு உயர் கொலஸ்ட்ரால் குடும்ப வரலாறு இருக்கலாம். “அதனால் தான் அனைத்து இந்தியர்களும் 25 வயதுக்குப் பிறகு தங்கள் இதய பரிசோதனைகளை ஆண்டுதோறும் செய்ய வேண்டும். குறிப்பாக அதுபோன்ற குடும்ப வரலாறு உள்ளவர்கள். மேலும், உடற்பயிற்சிக் கூடத்தில் சேரும் முன் அனைவரும் ஒரு முழுமையான இதய பரிசோதனை மற்றும் தாங்கும் திறன் சோதனையை செய்ய வேண்டும்” என்று டாக்டர் குமார் கூறுகிறார்.

மோஹித் எதை அலட்சியப்படுத்தினார் என்றால், அவர் உடற்பயிற்சி செய்யும் போதெல்லாம் அவருக்கு இடது கையில் ஏற்பட்ட வலிதான். “கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு உடற்பயிற்சியின்போது அந்த லேசான வலி ஏற்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம், அதை அவர் தசைப்பிடிப்பு என்று புறக்கணித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் வைஷ்ணோ தேவிக்குச் சென்றபோதும் இதே போன்ற ஒரு வலியை உணர்ந்தார். ஆனால், அதை மலையேற்றத்தின் காரணமாக ஏற்பட்டதாக அலட்சியப்படுத்தினார். அவர் தசைப்பிடிப்பு என்று நினைத்தது உண்மையில் ஆஞ்சினா வலி (angina pain). இது இதயத்திற்கு ரத்த ஓட்டம் குறைந்துவிட்டது என்பதற்கான முதல் அறிகுறி. ஆனால், அவர் ஒருபோதும் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை” என்று டாக்டர் குமார் கூறுகிறார். மேலும், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது அவருக்குத் தெரியாது. “அவர் ஒரு பரிசோதனை செய்திருந்தால், இந்த நெருக்கடி நிலையை அவர் அடைந்திருக்க மாட்டார்” என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

இடது கையின் மேல் பகுதியில் வலி, கீழ் தாடையில் வலி, மூச்சுத்திணறல் அல்லது எரிச்சல் உணர்வு மற்றும் அதீத சோர்வு ஆகியவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள்.

கட்டுப்பாடற்ற புரோட்டின் பவுடர் அடைப்புக்கான அபாயத்தை அதிகரித்ததா?

மோஹித் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர் என்றும், உடல் ஆரோக்கியமாக இருந்ததால், அவருக்கு இதயப் பரிசோதனையோ, மதிப்பீடோ தேவையில்லை என்று அவரது மனைவி ரூபி கூறுகிறார். “மோஹித் ஒழுக்கமாக இருந்ததால் எங்களுக்குத் தேவை ஏற்படவில்லை. அவர் துரித உணவுகளை சாப்பிடவோ அல்லது வெளியிலிருந்து உணவு ஆர்டர் செய்யவோ மாட்டார், வீட்டில் ஆரோக்கியமாகச் சாப்பிடுவார், புகைப்பிடிக்க மாட்டார், சமூக நிகழ்வுகளில் மட்டுமே அளவாக குடிப்பார். நாங்கள் மாதத்திற்கு ஒருமுறைக்கு மேல் உணவகத்திற்குச் சென்றதில்லை” என்று அவர் கூறுகிறார். அவருக்கு இதய பிரச்சினை ஏற்பட்ட பிறகுதான், சோதனைகள் மோஹித்திற்கு உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு கல்லீரல் இருந்தது தெரியவந்தது. “ஆனால், இந்த நோய்களில் எதுவுமே அறிகுறிகளாக வெளிப்படவில்லை” என்று ரூபி கூறுகிறார்.

இருப்பினும், மோஹித் சமீபத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் மூலிகை சப்ளிமெண்ட்கள் மற்றும் புரோட்டின் பவுடர்களை எடுக்கத் தொடங்கியிருந்தார். “அவர் உடற்பயிற்சிக் கூடத்தில் சுமார் 1.5 மணிநேரம் கார்டியோ மற்றும் எடைப் பயிற்சி செய்வார்” என்று ரூபி கூறுகிறார். புரதத்தை மிக அதிக அளவில், குறிப்பாக சப்ளிமெண்ட்டுகளிலிருந்து உட்கொள்வது சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். மேலும், நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தலாம், இது மறைமுகமாக இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.

மேலும், உடலின் தாங்கும் திறனைத் தாண்டிய அதிக புரதம், எலிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, தமனிகளில் பிளேக் (plaque) படிதலை ஊக்குவிக்கிறது. அதிக கொழுப்பு, அதிக புரதம் கொண்ட உணவை உட்கொண்ட எலிகளுக்கு பிளேக் படிதல் மட்டுமல்லாமல், அதிக கொழுப்பு, குறைந்த புரதம் கொண்ட உணவை உட்கொண்ட எலிகளை விட நிலைமை மோசமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தவிர, இந்த பிளேக் “நிலையற்றதாக” இருந்தது, அதாவது இது தமனிகளின் சுவரில் இருந்து எளிதில் உடைந்து, அடைப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

எனவே, நீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், லேசான அறிகுறிகள் இருந்தாலும் முதலில் ஒரு மருத்துவரை கலந்தாலோசியுங்கள் என்று டாக்டர் குமார் அறிவுறுத்துகிறார். “அவற்றை கவனிக்காமல், நீங்கள் கடுமையான அல்லது கடினமான செயல்களில் ஈடுபட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது திடீர் மாரடைப்பு மற்றும் திடீர் இதயத் துடிப்பு நிறுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்” என்று டாக்டர் குமார் கூறுகிறார்.

ஏன் சி.பி.ஆர் முக்கியம்?

உயிர்களைக் காப்பாற்ற சி.பி.ஆர் சமூக மட்டத்தில் கற்பிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் அப்பாஸ் கூறுகிறார். “மோஹித்தின் உடற்பயிற்சிக் கூட நண்பர்களால் சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட உதவி அவருக்கு உதவியது. மற்றவர்கள் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல. தவிர, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் நிரந்தர மூளை பாதிப்பு ஏற்படலாம், நோயாளிகள் தொண்டையில் ஒரு குழாயுடன் கோமாவிற்குச் செல்லலாம். இது நிதி, உணர்ச்சி மற்றும் மனரீதியாக குடும்பத்திற்கு ஒரு பெரிய சுமையை ஏற்படுத்தும்” என்று அவர் கூறுகிறார்.

மாரடைப்புக்குப் பிந்தைய மறுவாழ்வு (Post-Cardiac Rehabilitation) பற்றி என்ன?

சிகிச்சைகள் முடிந்த பிறகு, மாரடைப்பிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் 10, 15 நிமிடங்கள் நடக்கத் தொடங்கி, படிப்படியாக 6 வாரங்கள் அல்லது சற்று அதிகமாக 20, 30 மற்றும் 40 நிமிடங்கள் வரை அதிகரிக்க வேண்டும் என்று டாக்டர் தருண் கூறுகிறார். “அதன் பிறகு, அவர் என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கும் முன் நாங்கள் ஒரு ட்ரெட்மில் சோதனையைச் செய்கிறோம். உடல் செயல்பாடு, துணை ரத்த நாளங்களை உருவாக்குவதற்கும், சிறந்த உடல் தகுதி, அறிகுறிகளை சிறப்பாக கட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது. இவையெல்லாம் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன” என்று டாக்டர் குமார் கூறுகிறார்.

health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: