Advertisment

வெந்தயம் இப்படியும் பயன்படுமா? அடர் கூந்தலுக்கு அசத்தலான ஹேர் ஸ்பிரே!

Hair growth home remedies fenugreek Usage: அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் பொடுகு, உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் முகப்பரு ஆகியவற்றை விரட்டுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tips for hair grow, hair tips, hair spray, அடர்த்தியான முடிக்கு ஹேர் ஸ்பிரே, latest hair tips

Hair loss, hair loss vitamins, hair growth vitamins, hair growth tips, hair growth foods, முடி வளர, முடி உதிர்தல், ஹேர் குரோத்

Hair Loss Vitamins: முடி உதிர்வதற்கு சிகிச்சையளிப்பது சிலருக்கு ஒரு தொடர் போராட்டமாகும். இது ஒரு பொதுவான பிரச்சனை இதற்கு அரோக்கியமற்ற வாழக்கை முறை, ஜங்க் உணவுகள் (junk food), ஒழுங்கற்ற தூக்கம், மோசமான முடி பராமரிப்பு போன்ற பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். நிச்சயமாக ஏராளமான தயாரிப்புகள் சந்தையில் உள்ளன, அவை ஆச்சரியமான தீர்வுகளையும், தரலாம், ஆனால் அவை எதுவும் இயற்கை மற்றும் வீட்டு வைத்தியங்களுக்கு ஈடாவதில்லை. அது போன்ற ஒரு தீர்வுதான் வெந்தயத்தை உட்கொள்வது, இது முடி உதிர்தலுக்கான சிகிச்சையில் சிறந்ததாக கருதப்படுகிறது.

Advertisment

Hair growth home remedies, fenugreek Usage: வெந்தயத்தின் நன்மைகள்

வெந்தயத்தில் வைட்டமின் A, K, C மற்றும் போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளது. இது முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. வெந்தயத்தில் புரதச் சத்துக்களும் உள்ளன இது முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்.

Skin care Tips: வீட்டுல இருக்கும்போது இந்தச் சின்ன விஷயங்களை மறந்துடாதீங்க!

எப்படி ஒரு முடி தெளிப்பானை (hair spray) தயாரிப்பது

* இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவிடவும்.

* அடுத்த நாள் காலையில் அந்த தண்ணீரை ஒரு தெளிப்பானில் (spraying can) விடவும்

* இதை உங்கள் உச்சந்தலையில் நன்றாக தெளிக்கவும்.

* உங்கள் தலைமுடியில் 20 நிமிடங்கள் இந்த தண்ணீர் இருக்கட்டும். பிறகு ஷாம்பூ கொண்டு நன்றாக கழுவவும்.

எத்தனை முறை மீண்டும் செய்ய வேண்டும்: ஒவ்வொரு வாரமும் இதை மீண்டும் மீண்டும் செய்யவும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.

கூந்தலுக்கு வெந்தயத்தின் நன்மைகள்

பழமையான சமையலறை மூலப்பொருளான வெந்தயம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது மற்றும் மயிர்க்கால்களின் வேகமான மற்றும் ஆரோக்கியமான புதிய வளர்ச்சியை தூண்டுகிறது. இது antioxidant மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால் பொடுகு, உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் முகப்பரு ஆகியவற்றை விரட்டுகிறது.

ஹேர் கண்டிஷனராக வெந்தயம்

ஆலிவ் எண்ணெய் + வெந்தய பொடி

* ஆலிவ் எண்ணெயை ஒரு நிமிடம் சூடாக்கி அதில் வெந்தய பொடியை போட்டு அந்த எண்ணெய் கலவையை குளிர்விக்க அனுமதிக்கவும். அடுத்து சிறிது பருத்தி பஞ்சை எடுத்து கலவையில் முக்கி உங்கள் தலையில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் உங்கள் முடியை கழுவவும்.

வாரத்துக்கு இரண்டு முறை இதை திரும்ப திரும்ப செய்யலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment