facial hair removal, natural way to remove facial hair, papaya face pack for hair removal, skincare, indian express, indian express tamil, பப்பாளி முக பூச்சை
Hair removal Tamil News: முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க இயற்கையான வழிகளை தேடுகிறீர்களா? இந்த பப்பாளி முக பூச்சை (face pack) முயற்சித்துப் பாருங்களேன்.
Advertisment
இந்த ஊரடங்கு காலத்தில் அனைவரும் தங்கள் தோல் பராமரிப்பு நடைமுறைகளுக்காக இயற்கை வழிகளிலேயே செல்கின்றனர். முதலில் அழகு நிலையங்கள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன, இரண்டாவதாக துணிந்து பொது இடங்களுக்கு செல்வதை விட காத்திருக்க விரும்புகிறார்கள். கோடைகாலத்தில் கிடைக்க கூடிய பப்பாளி பழத்தை வைத்து ஒரு முகப்பூச்சு செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்கள் பிரச்சனையை போக்கலாம். அது குறித்துப் பார்க்கலாம்.
ஒரு பப்பாளி பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்ஸியில் போட்டு நல்ல மையாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து இந்த கூழை தேவையற்ற ரோமங்களை அகற்ற வேண்டிய முகம், கை மற்றும் கால்களில் பூசிக் கொள்ளவும். இதை முகத்தில் பூசியப் பின்னர் முகத்தை நன்றாக தொடர்ந்து மசாஜ் செய்ய மறந்துவிடாதீர்கள். சிறிது நேரம் கழித்து முகத்தை நன்றாக நீரில் கழுவிக் கொள்ளவும். ஒரு வாரத்துக்கு இரண்டு தடனை இதை தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் மீண்டும் அழகு நிலையத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் வராது.
Advertisment
Advertisements
அனைத்து விதமான தோல் வகைகளுக்கும் இந்த முகப்பூச்சு பொருந்தும். பப்பாளி மயிர் கால்களை விரிவுபடுத்தி அதை இயற்கையாகவே விழச்செய்யும் என நம்பப்படுகிறது. தேவையற்ற ரோமங்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் இந்த முகபூச்சு உங்கள் முகத்தை சுத்தம் செய்வதோடு இயற்கையாகவே பொலிவு பெறச்செய்கிறது. திடீரென முகத்தில் முடி வளர தொடங்கியவர்கள் மற்றும் மென்மையான முடி உள்ளவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால் குறிப்பாக மேல் உதட்டில் உள்ள தேவையற்ற ரோமங்களை மட்டும் தான் நீக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் எலுமிச்சை, தேன் மற்றும் சக்கரை சேர்த்து செய்யும் பேஸ்டை நீங்கள் முயற்சிக்கலாம். எலுமிச்சை சாறு அதன் bleaching பண்புகளுக்காக பாரட்டப்படுவது. உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி சக்கரை அவ்வளவுதான். இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் தயாரிக்கவும். மேல் உதட்டில் இதை தடவி 15 நிமிடங்கள் காயவிடவும். பிறகு நன்றாக துடைத்து விட்டு தண்ணீரில் கழுவவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news