அதிகமாக பயணம் செய்பவர்கள் மற்றும் அன்றாட பணிகளுக்காக நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு முடி வறண்டு காணப்படும். இதனால், முடி உதிர்வு மற்றும் பொடுகு தொல்லைகள் உருவாகும். இதற்கு தீர்வாக ஆளி விதைகளைக் கொண்டு வீட்டிலேயே ஹேர்பேக் செய்யலாம்.
ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் ஆளி விதைகளை போட்டு, அத்துடன் அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஆளி விதைகளில் இருந்து ஜெல் வெளியேற தொடங்கும்.
இதையடுத்து, ஆளி விதைகளை வடிகட்டி அதன் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு ஸ்பூன் கேஸ்டர் ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்படி செய்தால் ஹோம்மேட் ஹேர் ஸ்மூத்திங் ஜெல் தயாராகி விடும்.
இந்த ஜெல்லை நன்றாக தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு செய்தால் முடியில் இருக்கும் வறட்சி தன்மை நீங்கி மிருதுவாக மாறும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.