Xmas 2019 Images, Whatsapp and Facebook Status: இன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக காலை முதலே சர்ச்சுகளில் சிறப்புத் தொழுகைகள் நடந்து வருகின்றன.
Advertisment
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
இறைமகன் பிறக்கப்போகிறார் என்பதன் அடையாளமாக டிசம்பர் முதல் தேதியே வீடுகளில் நட்சத்திரம் தொங்கவிட்டு இது கிறிஸ்துமஸ் மாதம் என்று அறிவிக்கிறார்கள்.
வீட்டை ஒட்டடை அடித்து, கழுவிச் சுத்தம் செய்வதைப்போலவே நம் மனதையும் ஒட்டடை அடித்து, கழுவிக் காயப்போட வேண்டிய தருணம் இது. இந்த ஆண்டு முழுவதும் சிறிது சிறிதாக நம் மனதில் சிந்தனையில் ஒட்டடை படிந்திருக்கலாம்.
நம் மனமே கடவுள் வாழும் ஆலயம். மனமே இறைமகன் பிறக்க இருக்கும் மனத் தொழுவம். அப்படியிருக்கையில் ஒவ்வொரு வருடமும் உங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள கிறிஸ்து தன் பிறப்பின் மூலம் வாய்ப்பு அளிக்கிறார் என்பதே நம்பிக்கை.
கிறிஸ்துமஸ் தாத்தா, அவர் தரும் கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.
மத். 18:35-ல் இயேசு, "உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை உங்களை மன்னிக்க மாட்டார்" என்று கூறுகிறார்.
எனவே நம் எதிரிகளை மன்னித்து அவர்களை நேசித்தால் அதுவே சிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக அமையும்.