How to Make sweet Pongal: பொங்கல் அன்று மற்றொரு சிறப்பு என்னவென்றால், அது சமையல் தான். பொங்கலுக்கு என்ன ஸ்பெஷலா சமச்சிட போறோம்னு யோசிக்காதீங்க.. இதை ட்ரை பண்ணுங்க.
தமிழர்கள் பல திருநாள்களைக் கொண்டாடுகிறார்கள். அவற்றுள் முக்கியமானது பொங்கல் திருநாள். இத்திருநாளைத் தைத்திங்கள் முதல் நாளில் கொண்டாடுகிறார்கள்.
தமிழர்கள் பொங்கல் திருநாளை மூன்று நாட்கள் கொண்டாடுகிறார்கள். முதலாவது நாள் பெரும்பொங்கல். அன்று அனைவரும் புத்தாடை அணிவார்கள். புதிய பானையில் புத்தரிசி இடுவார்கள். அதனைப் பொங்கல் இடுவார்கள். பொங்கல் பொங்கும்போது 'பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். பின்னர் பொங்கலைக் கதிரவனுக்குப் படைப்பார்கள். எல்லோரும் கதிரவனை வழிபடுவார்கள்.
பொங்கல் அன்று மற்றொரு சிறப்பு என்னவென்றால், அது சமையல் தான். பொங்களுக்கு என்ன ஸ்பெஷலா சமச்சிட போறோம்னு யோசிகாதீங்க.. இதை ட்ரை பண்ணுங்க.
/tamil-ie/media/media_files/uploads/2019/01/smartcard-300x200.jpg)
1. கருப்பட்டி பொங்கல்:
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.
மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
Pongal 2019 Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ... நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா?
அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து கிளறவும்.
பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும். சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/01/mla-2-3-1024x681.jpg)
2. உளுந்து பாயாசம்:
உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிடுங்கள். உலர்ந்தவுடன் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றுங்கள். வாணலியில் சிறிது நெய் விட்டு, அரைத்த உளுந்தைப் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள்.
Rangoli Kolam: வந்தாச்சு பொங்கல்.. அழகாகும் வாசல்! இந்த கோலத்தை போடுங்கள்.
அதில் பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பச்சை வாசனை போனதும் துருவிய வெல்லம், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, நெய்யில் வறுத்த தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேருங்கள். பாயசம் பதத்தில் வந்ததும் இறக்கிவிடுங்கள். இந்த பொங்கலுக்கு உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க உளுந்து பாயாசம் கண்டிப்பாக ஒரு வித்யாசமான உணவாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.