Happy Pongal Wishes Images, Quotes, Wallpapers : அனைவருக்கும் முதலில் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தின் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். அனைவரும் வீட்டுக்கு சென்று கொண்டிருப்பீர்கள், அல்லது ஏற்கனவே சென்று வீட்டு வேலைகளில் பயங்கர பிஸியாக இருப்பீர்கள். அல்லது அலுவலக்த்தில் அமர்ந்து கொண்டு நாளை காலை எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்பில் விழித்திருப்பீர்கள். உங்களுக்காக தான் இந்த பதிவு.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
முதல் நாள் தைப் பொங்கல், இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல். உங்கள் அனைவருக்கும் எந்த பொங்கல் மிகவும் விருப்பமான பொங்கல்? அனைவரும் பழைய பிற்போக்கு சிந்தனைகளும் எண்ணங்களும் நீங்கி, புதிய நல்லெண்ணெங்கள் உருவாகிட வேண்டிக் கொள்வோம்.
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற உள்ளது. யாரெல்லாம் பங்கேற்க அங்கே செல்கின்றீர்கள்.? இப்போதே டிக்கெட்டெல்லாம் போட்டு வச்சுடுங்க. இல்லைன்னா கடைசி நிமிசத்துல கஷ்டம் தான்.
இந்த வாழ்த்து அட்டைகளை நீங்கள் டவுன்லோடு செய்து உங்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அனுப்பி மகிழ்ந்திடுங்கள். வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்ஃபுக் மெசெஞ்சர்கள் மூலம் எளிமையாக இன்று அனைவருக்கும் வாழ்த்து கூறிவிட இயலும்.
உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! நமக்கு எப்போதும் வாழ்த்துகள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் முன்பு போல நம்மால் கார்டுகளை வாங்கி நேரில் சென்று வாழ்த்து சொல்ல இயலுவதில்லை. அவர்களுக்காகவே இந்த பக்கம். இங்கு இருக்கும் இந்த வாட்ஸ்ஆப் இமேஜ்களை டவுன்லோடு செய்து உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு நீங்கள் அனுப்பிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : பொங்கல் திருவிழா: மல்லிகை பூ கிலோ 7000 வரை உயர வாய்ப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.