Valentine's Day 2020 Quotes Images, Whatsapp Wishes: பிப்ரவரி 14-ம் தேதியான இன்று உலக காதலர் தினம். உங்கள் மனதுக்கு பிடித்தவருக்கு இந்த வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மனதில் இடம்பிடிங்க. உங்களின் அன்பு இந்த உலகை ஆளட்டும். அனைவருக்கும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் காதலர் தின நல்வாழ்த்துகள்!
Advertisment
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
முதல்ல, காதலர் தின ஹிஸ்டரி-ன்னு சொல்லப்படுற கதையை தெரிந்து கொள்வோமே. காதலுக்கு அடையாளமாக ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ் அடையாளமாகத் திகழ்கின்றனர்.
Advertisment
Advertisements
இவர்களது காதல் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புவதும் இல்லை. ஏனென்றால் அவர்களது காதல் அவர்களுக்கு பெரியது.
கி.பி.14ம் நூற்றாண்டில் புகழ் பெற்ற ரோம சாம்ராஜ்யத்தை ஆண்டவர் இரண்டாம் கிளாடியஸ். அவரது ராணுவத்தில் ஆட்கள் பற்றாகுறையால் இளைஞர்கள் திருமணத்தை தவிர்த்து, கட்டாயம் ராணுவத்திற்கு வரவேண்டும் என்று கட்டளையிட்டார்.
ஏனெனில் திருமண பந்தத்திற்குள் நுழைந்தவரை கட்டாயப்படுத்த அப்போதைய அந்நாட்டு சட்டம் அனுமதிக்கவில்லை, இதற்கு அப்போது வாழ்ந்த வாலன்டைன் எனும் பாதிரியார் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணமும செய்து வைத்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த அரசர், அவருக்கு மரணதண்டனை விதித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு இறந்த நாளான பிப்ரவரி 14ஆம் தேதியை இளைஞர்கள் வாலன்டைன் தினமாகவும் கொண்டாட தொடங்கினர்.
20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாலன்டைன் தினம் காதலர் தினமாக மாறியது என்று கூறப்படுவதுண்டு.
காதல் எல்லை மீறுவது நல்லது; அதன் அடுத்த வெர்ஷனான காமம் எல்லை மீறாமல் பார்த்துக் கொண்டால் காதல் எந்நாளும் இனிக்கும்.