scorecardresearch

விசாவுக்கு ‘அப்ளே’ செய்யும் போது இந்த 5 விசயங்களை மறக்காதீர்கள்!

Visa Form Filling Instructions: உங்களுக்கு இந்த நாட்டு அரசாங்கம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளில் என்ன பெயர், வயது, பிறந்த தேதி இருக்கின்றதோ அதை மட்டுமே குறிப்பிடுங்கள்.

UK Brings Back 2-Year Post-Study Work Visa
UK Brings Back 2-Year Post-Study Work Visa

Visa Form Filling Instructions : ஒரு நாட்டிற்கு செல்லும் போது பாஸ்போர்ட்டினை போன்றே அந்நாடு தரும் விசா ஒப்புதலும் மிக முக்கியமானது. விசா விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் சமயங்களில் நாம் பல முறை குறிப்பிட்ட தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது வழக்கமாகிவிடுகிறது. அந்நாட்டு வெளியுறவு தூதரகத்திற்கும் நம்முடைய விசாவை ரிஜெக்ட் செய்வது வழக்கம் ஆகிவிடுகிறது. அதனால் அடுத்த முறை விசாவிற்கு அப்ளே செய்யும் போது இந்த 5 தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள்…

பெயர் மற்றும் தனி விபரங்கள்

ராசி, நட்சத்திரம் நம்பிக்கை அடிப்படையில் சிலர் பெயர்களை மாற்றிக் கொள்வது வழக்கம். மேனன் என்பது மேனோன் ஆக இருக்கும். வித்யா என்பது வித்தியாவாக மாறிவிடும். ஆனால் நம்முடைய அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளில் அந்த மாற்றங்களை எல்லாம் எதிர்பார்க்க இயலாது. ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. அதனால் உங்களுக்கு இந்த நாட்டு அரசாங்கம் அளித்திருக்கும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளில் என்ன பெயர், வயது, பிறந்த தேதி இருக்கின்றதோ அதை மட்டுமே குறிப்பிடுங்கள்.

தேவையான ஆவணங்கள்

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான ஆவணங்கள் தேவைப்படும். குறிப்பிட்ட ஒரு இடத்தை நோக்கி பயணிக்கும் போது பெறப்படும் விசாக்களுக்கு தேவையான ஆவணங்களை க்ளோபல் விசா சர்வீஸ் ப்ரோவைடர் பக்கங்களில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம். அதனை முறையாக படித்து தேவையான ஆவணங்களை விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும். தவறிவிட்டால் அனைத்தையும் நாம் முதலில் இருந்து துவங்க வேண்டும்.

வங்கி பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள்

தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர்கள் நன்றாக அறிந்திருக்க கூடிய ஒன்று இது. விசா விண்ணப்பிக்கும் போது சில நாடுகளில் வங்கி பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை சமர்பித்தல் கட்டாயமாக்கியுள்ளது. எனவே இந்த ஆவணத்தை எக்காரணம் கொண்டும் மிஸ் பண்ணிடாதீங்க…

தாமதத்தை தவிர்த்துவிடுங்கள்

கூடுமான வரையில், தாமதம் ஏதும் இல்லாமல் உங்களின் பயண நாட்களுக்கு வெகுநாட்கள் (3 மாதங்களுக்கு) முன்பே நீங்கள் விசாவிற்கான விண்ணப்பத்தினை அப்ளே செய்துவிடுவது நல்லது.

ஸ்பான்சர்ஷிப்

ஒரு வேளை ஸ்பான்சர்ஷிப் மூலமாக நீங்கள் வெளிநாடுக்கு செல்கின்றீர்கள் என்றால் அது குறித்த முழுமையான தகவல்களை மறக்காமல் விசா விண்ணப்பத்தில் இணைத்துவிடுங்கள். இதுவும் நீங்கள் பயணம் செய்யும் நாடுகளைப் பொறுத்து மாறக்கூடியது தான். ஆகையால் இந்த 5 விசயத்திலும் கவனம் செலுத்தினால் பிரச்சனை இல்லாமல் நீங்கள் வெளிநாட்டிற்கு சென்று வரலாம்.

மேலும் படிக்க :  Viral Video : ஃப்ளைட்ல போன இந்த விசயத்தை கனடா மக்களை போல ஃபாலோ பண்ணுங்க!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Hassle free visa application process avoid these 5 common mistakes