பலவகை சட்னிகள் இந்திய சமையலறையில் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகையான உணவிற்கும் ஒவ்வொரு வகையான சட்னிகள் பறிமாறப்படுகின்றது.சுவையான சைடு டிஷ்ஷாக இருப்பது மட்டுமல்லாமல், ஏராளமான சட்னி வகைகள் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் அமைகிறது. ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா, சமுக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்ட ஆரோக்கிய தக்காளி பூண்டு சட்னி எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி – 1
பூண்டு பற்கள் – 4
பச்சை மிளகாய் – 1
கடுகு எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
சர்க்கரை – ஒரு சிட்டிகை
சட்னி செய்முறை
ஒரு கடாயில் சிறிது அளவு எண்ணெய் சேர்த்து நன்கு சூடாக்கவும்.
அதில் நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள் , மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
அதில், உப்பு மற்றும் சர்க்கரையை ஒன்றாகச் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்தெடுத்தால் சுவையான சட்னி ரெடி.
சட்னியின் நன்மைகள்
தக்காளி வைட்டமின்கள் மற்றும் glutathione நிறைந்தது. மேலும், புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்க உதவுகிறது. ப்ரீபயாடிக், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்திகொண்ட பூண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)