இரும்புச் சத்து மிகுந்த சென்னா, வெல்லம்… பெண்களுக்கு இந்த பீரியடில் அவசியமான உணவு!

Health Benefits: வெல்லம் மற்றும் உப்பு கடலை சேர்த்து சாப்பிடும்போது அதிலுள்ள வைட்டமின் B6 முளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது தான் மிகவும் சிறந்த தேர்வாக அமைகிறது. சரியான நேரத்தில், சரியான உணவை தேர்வு செய்து சாப்பிடுவது தான் மிகவும் முக்கியம்.வெல்லம் மற்றும் உப்பு கடலை ஆகிய இரண்டும் ஒரு சரியான தேர்வாக அமைகிறது. இது பல வகையான கிரானிக் நோய்கள் ஏற்படுவதில் இருந்து உங்களைத் தடுக்கிறது, மற்றும் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், தற்போதைய காலகட்டத்தில் இவை இரண்டும் மிக முக்கியமான ஒரு உணவு பொருளாகும்.

உப்பு கடலையில் புரதம் அதிகம் காணப்படுகிறது மற்றும் வெல்லத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை தவிர, வெல்லம் ஆனது துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவற்றால் நிறைந்துள்ளது; மற்றும் உப்பு கடலையில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, ஃபோலேட், நியாசின், தியாமின், ரைபோஃப்ளேவின், மாங்கனீசு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் (காப்பர்) போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன.

வெல்லம் மற்றும் உப்பு கடலை ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவதால் ஏராளமான பயன்கள் கிடைப்பதாக கூறுகிறார் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பாவ்சர். பயன்கள் குறித்து பார்க்கலாம்.

வைட்டமின் B6 நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. வெல்லம் மற்றும் உப்பு கடலை சேர்த்து சாப்பிடும்போது அதிலுள்ள வைட்டமின் B6 முளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடல் மனநிலையை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் ஹார்மோன்களையும், மன அழுத்தத்தை சமாளிக்க உதவும் நோர்பைன்ப்ரைனையும் உருவாக்க உதவுகிறது. இதனால் மனச்சோர்வாக சகிப்புத்தன்மையை மேம்படுத்த விரும்பும்போது இதனை சாப்பிடலாம்.

ஆற்றல் இழப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வு

இரும்பு மற்றும் புரதத்தின் ஆதாரமாக இருக்கும் இந்த கலவை ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு நல்லது.

வெல்லத்தில் இரும்புச்சத்து உள்ளது மற்றும் உப்பு கடலையில் புரதச்சத்து உள்ளது. பெண்களுக்கு, மாதவிடாய் காலத்தில் இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும், மாதவிடாய் நாட்களின் போது ஏற்படும் இரத்த இழப்பை ஈடுசெய்யவும், தங்களை உற்சாகமாக வைத்து கொள்ளவும் வெல்லம் மற்றும் உப்பு கடலை ஆகிய இரண்டும் நமக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த வெல்லம் மற்றும் உப்பு கடலை ஆகிய இரண்டின் கலவையை நீங்கள் அதிகாலையிலோ அல்லது மாலையிலோ ஒரு சிற்றுண்டியாக சாப்பிடலாம். உப்பு கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையென்றால், லட்டு அல்லது பர்ஃபி செய்து சாப்பிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Health benefits immunity booster combination of jaggery roasted gram in tamil

Next Story
வெல்லம், வேர்க்கடலை… என்ன நன்மை? எப்படி பயன்படுத்துவது?Peanut and jaggery, பர்பி, Peanut and jaggery barfi, groundnut jaggery barfi, வேர்க்கடலை, வெல்லம் பாகு, வெல்லம் வேர்க்கடலை, பர்பி, வேர்க்கடலை மிட்டாய், நன்மைகள், A healthy combo Peanut and jaggery, healthy combo Peanut and jaggery, healthy snacks, healthy combo, food tips, healthy food tips
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com