ஜீரண சக்தி, இம்யூனிட்டி… பொட்டுக் கடலையில் இவ்ளோ பலன் இருக்கு!

Health benefits of roasted bengal gram alais roasted pottukadalai : பொட்டுக்கடலையில் நார்ச்சத்துக்களும் புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளன. பொட்டுக்கடலை ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும். மேலும் இது செரிமான பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.

நாம் எல்லோரும் விரும்பி உண்ணக்கூடிய பருப்பு வகைகளில் ஒன்று  வறுத்த பொட்டுக்கடலை. குறிப்பாக வட இந்தியர்கள் இந்த பொட்டுகடலையை அதிகம் விரும்பி சாப்பிடுவர். இதனை எல்லோரும் அதன் சுவைக்காகவும், மொறுமொறுப்புக்காகவும் சாப்பிடுவர். ஆனாலும் இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வாருங்கள் அவை என்ன என்பதைப் பார்ப்போம்.  

இந்த பொட்டுக்கடலையில் நார்ச்சத்துக்களும் புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளன. பொட்டுக்கடலை ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும். மேலும் இது செரிமான பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.

புரதச்சத்து

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் வறுத்த பொட்டுக்கடலையும் ஒன்று.  எடை குறைக்க விரும்புபவர்களுக்கு புரதச்சத்து மிக அவசியம். எனவே இந்த வறுத்த பொட்டுக்கடலை உங்கள் எடை இழப்புக்கு உதவும்.

நோய் எதிர்ப்பு

வறுத்த பொட்டுக்கடலையில் மாங்கனீஸ், போலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே இது இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. மேலும், இந்த சத்துக்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கும் உதவுகின்றன.

நீரிழிவு நோய்

வறுத்த பொட்டுக்கடலையை நீரிழிவு நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது. எனவே, இது உங்களை நீரிழிவு நோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம்

வறுத்த பொட்டுக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. பாஸ்பரஸ் உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இதனால் உங்கள் இதய ஆரோக்கியமும் மேம்படும். உங்கள் உடலின் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் அதிக பாஸ்பரஸ் உட்கொள்ளல் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உங்கள் உடலில் நிகழும் பல உயிரியல் செயல்முறைகளில் பாஸ்பரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.

புற்றுநோய்

செலினியம் தாது வறுத்த பொட்டுக்கடலையில் அதிகளவில் காணப்படுகிறது. இந்த செலினியம் ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸினேற்றி ஆகும். செலினியம் டி.என்.ஏக்களின் சேதத்தை குறைப்பதற்கு உதவுகிறது. இதனால் ஒரு சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

உடல் எடை குறைப்பு

உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பொட்டுக்கடலை ஒரு சிறந்த உணவாகும். இதிலுள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் ஒட்டுமொத்த கலோரியை குறைப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன. 100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரதம் மற்றும் 16.8 கி நார்ச்சத்துக்கள் உள்ளன.

இதிலுள்ள நார்ச்சத்துக்கள் உணவை நகர்த்த உதவுகின்றன. இதனால் வயிறு வீக்கம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இது எளிதான குடல் இயக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், மலம் கடினப்படுவதை தடுக்கிறது.

எலும்பு ஆரோக்கியம்

எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணவும், எலும்பு சம்பந்தமான வறுத்த பொட்டுக்கடலை பெரிதும் உதவுகிறது. வறுத்த பொட்டுக்கடலையில் தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உங்களின் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், அசாதாரண எலும்பு உருவாக்கத்திற்கும் உதவுகின்றன. மேலும் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளான எலும்பு பலவீனமாதல், மூட்டு வலிகள் போன்ற பிரச்சனைகளை தடுக்கவும் பொட்டுக்கடலை உங்களுக்கு உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Health benefits of bengal garm alais roasted pottukadalai

Next Story
அஞ்சலி: ஆயிரம் அம்பேத்கர் சிலைகளை செய்த சிற்பி சிவானந்தம்Sirpi siva, sirpi sivanandam, sculptor sivanandam passes away, ranipet, kaarai, ambedkar sculpture, the buddha sculpture, சிற்பி சிவானந்தம் மறைவு, சிற்பி சிவா, dalit movement, ambedkar statue maker sirpi siva, sirpi sivanandam making only ambedkar statue, republic party of india, vellore district
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com