இந்திய மசாலாப் பொருட்கள் அவற்றின் தனித்துவமான சுவைகளுக்காகவும் எந்தவொரு செய்முறைக்கும் அவை அளிக்கும் செழுமைக்காகவும் உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. இந்த மசாலாப் பொருட்கள் உணவிற்கு சுவை அளிப்பது மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. இந்திய வீடுகளில் இந்த மசாலாப் பொருட்களைக் கொண்டு பலகாலமாக வீட்டு வைத்தியம் செய்து வருகின்றனர்.
அப்படியொரு மசாலாப் பொருளான சீரகம், சமையலறை மசாலாவாக மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டுள்ளது.
சீரகம் தோல் பிரச்சனைகள், செரிமானப் பிரச்சனைகள் மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
உங்களது சமையலில் சீரகத்தை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறிதளவு தண்ணீரில் சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து, இளஞ்சூடாக குடிப்பது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும். சீரகத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது காலத்தின் தேவை. நீங்கள் சரியான நோய் எதிர்ப்பு பாதையில் செல்வதை உறுதி செய்வதில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கும். சீரகத்தில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் சீரகம் உதவுகிறது.
கருப்பு மிளகு, மஞ்சள் மற்றும் சீரகத்தைக் கொண்டு செய்யப்படும் பானம் குளிர் மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் ஒரு சிறந்த கலவையாகும்.
செரிமானத்திற்கு நல்லது
வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் சீரகம் மிகவும் நன்மை பயக்குகிறது. ஏனெனில் இது செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுகிறது. அதனால் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. சீரகத் தண்ணீரை உட்கொள்ளும்போது, இது வயிற்று வலியிலிருந்து நிவாரணத்தையும் அளிக்கிறது.
இரத்த அழுத்தம்
சீரகம் பொட்டாசியத்தின் வளமான மூலமாகும். பொட்டாசியம் உடலில் அதிகப்படியான உப்பு உள்ளடக்கத்தின் எதிர்மறையான தாக்கத்தை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கலாம். எனவே, இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
நீரிழிவு நோய்
சீரக விதைகள் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு பலனளிக்கிறது.
எடை குறைப்பு
சீரகம் எடைக் குறைப்பிற்கும் உதவுகிறது. செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தேவையற்ற பசி வேதனையையும் கொல்கிறது. எனவே அதிகப் பசி இல்லாமல் அதிகமாக சாப்பிட மாட்டீர்கள். சீரக நீர் கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. எனவே எடைக் குறைப்புக்கு சீரகம் உதவுகிறது.
தோல் ஆரோக்கியம்
சீரகம் விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக இருப்பதால் வயதான எதிர்ப்பு பண்புகள் இருப்பதாகவும் அறியப்படுகிறது. இது முன்கூட்டிய வயதாவதைத் தடுக்கிறது, மேலும் முகப்பரு மற்றும் கோடுகள் போன்ற பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
முடி ஆரோக்கியம்
சீரகம் பொட்டாசியம், கால்சியம், செலினியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இவை அனைத்தும் சருமத்தை ஒளிரச் செய்வதற்கு முக்கியமானவை. முடி உதிர்தல் மற்றும் முடி மெலிந்து போவதைத் தடுக்கவும் இந்த ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil