/tamil-ie/media/media_files/uploads/2021/11/ginger-tea_1200_getty.jpg)
நம்மிடையே ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் இரண்டும் உள்ளன. ஆனால், உங்கள் நாளை ஆரோக்கியமாகத் தொடங்க விரும்பினால், உங்கள் சமையலறையிலே அதற்கான வாய்ப்பு உள்ளது. அது, உங்கள் சமையலறையில் எப்போதும் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த பொருட்களில் ஒன்றான இஞ்சி தான்!
நல்ல இஞ்சி, இந்திய வீடுகளில் விரும்பப்படுகிறது, அதை நாம் உணவுகளில் மட்டுமல்லாது தேநீரிலும் சேர்த்து பயன்படுத்தி வருகிறோம். இஞ்சி, உங்கள் உணவுகளுக்கு சுவையூட்டுவதைத் தவிர, பாரம்பரியமாக ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இஞ்சி உங்கள் சருமம், முடி மற்றும் உடலுக்கு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளின் சக்தியாக உள்ளது.
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால், ஷோகோல், ஜிங்கரோன் மற்றும் பல ஆவியாகும் கலவைகள் அழற்சி எதிர்ப்பிற்கு உதவுகின்றன. இவை இஞ்சிக்கு கடுமையான, வலுவான வாசனை மற்றும் சுவையை வழங்குகின்றன. மேலும், நமக்கு அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன. ஆனால், இஞ்சியில் இருந்து இந்த நன்மைகள் அனைத்தையும் கிடைக்க செய்ய சிறந்த வழி இஞ்சி நீரை தொடர்ந்து குடிப்பதாகும்.
இஞ்சி நீரின் ஆரோக்கிய நன்மைகள்
எடை இழப்பு
இஞ்சி சிறந்த சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், எடை இழப்புக்கும் உதவுகிறது. நீங்கள் தொடர்ந்து இஞ்சி தண்ணீரை குடித்து வந்தால், அது ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சி, முழு ஆற்றலை வெளியிடும். இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிட தேவையில்லை. எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இஞ்சி உங்கள் உணவாக இருக்க வேண்டும்.
சருமத்திற்கு நல்லது
இஞ்சி நீர் உங்கள் சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இது ஆன்டிஆக்ஸிடன்ட் ஜிஞ்சரோல்களால் நிரம்பியுள்ளது, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட முடியும், இதன் மூலம் உங்களுக்கு ஒரு சீரான தொனி மற்றும் ஒளிரும் சருமத்தை அளிக்கிறது. மேலும் இது உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதை இறுக்கமாக்கி, வயதான மற்றும் பல்வேறு அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் முடியும். மேலும், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அனைத்து வகையான தொற்றுநோய்களையும் எதிர்த்து உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் மாற்றும்.
மாதவிடாய் வலியைக் குறைக்கும் வழி
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அசௌகரியத்தைப் போக்க இஞ்சித் தண்ணீரைக் குடியுங்கள். உண்மையில், தைவானின் மகப்பேறியல் இதழில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இஞ்சி மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகளைக் குறைப்பதில் OTC வலி நிவாரணியைப் போலவே பயனுள்ளதாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
செரிமான பிரச்சனைகளுக்கு உதவும்
ஒரு நாளைக்கு ஒரு முறை இஞ்சி தண்ணீரை உட்கொள்பவர்களுக்கு அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும், அவர்கள் வயிற்று அமில ரிஃப்ளக்ஸ், குமட்டல் அல்லது அதிகப்படியான வாயு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும், இஞ்சி நீர் வாந்தி மற்றும் குமட்டலில் கணிசமாக நிவாரணம் அளிக்கிறது.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது
அதிக அளவு கொலஸ்ட்ரால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இஞ்சி நீர் உங்கள் தீர்வு! சவுதி மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில், தினமும் இஞ்சியை உட்கொள்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எல்.டி.எல், கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கிறது.
இஞ்சி நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது
இஞ்சி நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களைக் கையாள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது, புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.
மேலும், இஞ்சி நீரில் பொட்டாசியம் மினரல் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உங்கள் இதயம், தசைகள், எலும்புகள் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கியமானது, ஏனெனில் இது உங்கள் செல்கள் உப்பைக் கையாள உதவுகிறது. மேலும் பொட்டாசியம் குறைபாடு இதய பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இஞ்சி நீர் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
1-2 அங்குல புதிய இஞ்சி
3 கப் தண்ணீர்
1 டீஸ்பூன் தேன்
செய்முறை
இஞ்சியைத் தட்டி, ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் அதில் இஞ்சியை சேர்க்கவும்.
அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி, 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
இஞ்சி துண்டுகளை அகற்ற நீரை வடிகட்டவும்.
ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
அவ்வளவு தான் உங்கள் இஞ்சி நீர் தயார்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.