அரிசி தண்ணீர்: இத்தனை விட்டமின்கள் இதில் இருக்கு; மிஸ் பண்ணாதீங்க!

Health Benefits: நாம் அன்றாடம் வீணாக்கும் அரிசி கழுவிய நீரில் நிறைந்துள்ள எண்ணற்ற சத்துக்கள் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ricewater-benefits-for-skincare
rice water tamil news

இந்தியாவில் பாரம்பரிய உணவு தான் அரிசி. அந்த அரிசி கழுவிய நீரானது, இந்தியாவின் பல பகுதிகளில் அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது..பல ஆய்வுகளிலும் இந்த நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. ஜப்பானில் காலங்காலமாக இதனை கொண்டு தான் கூந்தலை பராமரித்ததாக வரலாறு தெரிவிக்கிறது. அந்த நீரில் அப்படி என்ன தான் இருக்கு என்பதை தெரிந்துகொள்வோம். கூடவே எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம்.

அரிசி தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும். அதற்கு காட்டனை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

உங்கள் உலர் சருமம் கவலை அளிக்கிறதா? அரிசி நீரை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தின் மேல் பகுதியை நீர்த்தன்மை பெற வைத்து, சரும அணுக்களை புத்துணர்ச்சி பெற வைத்து அதை ஆரோக்கியமாக, நீர்த்தன்மை மிக்கதாக, மென்மையானதாக ஆக்குகிறது,

முகத்தை சுத்தமாக்க, இயற்கையான பேஸ் கிளின்ஸர் தேவை எனில் அரிசி நீர் கைகொடுக்கும். உங்கள் சருமத்தின் மீது கிளின்சராக செயல்பட்டு தூசுகளை அகற்றி, துளைகளை சுத்தமாக்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லம் கொஞ்சம் பஞ்சில் அரிசி நீர் நனைத்து உங்கள் முகத்தை அதை கொண்டு துடைத்துக்கொள்ள வேண்டியது தான்.

இந்த நீரில் வைட்டமின் ஏ, சி, டி, ஈ நிறைந்துள்ளது.அரிசியை நீரில் ஊறவைக்கும் போது இதிலிருக்கும் ஸ்டார்ச் ஆனது கூந்தலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.நீங்கள் வழக்கமாக செய்வது போல் உங்கள் முடியை ஷாம்பு மற்றும் கன்டிசனர்களைப் பயன்படுத்திக் கழுவிய பின்னர் இறுதியாக அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்தி முடியை கழுவ வேண்டும். இதில் இந்த நீரை 12 முதல் 24 மணி நேரம் வரை சாதரணமாக பாத்திரத்தில் வைத்துவிட்டு பின்னர் பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து இப்படிச் செய்து வருவதன் மூலம் முடி ஆரோக்கியத்துடனும், போஷாக்குடனும் வளரும் என்கின்றனர்.

உடல் வெப்பநிலையை சீராக்க நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். கோடைகாலத்தில், உடலில் அதிக நீழிப்பு ஏற்படும். அப்போது அரிசி தண்ணீரை உட்கொள்வது உடலை குளிர்விக்க ஒரு சிறந்த வழியாகும்.

குளிக்கும்போது சிறிது அரிசி நீரை உங்கள் குளியலில் சேர்க்கலாம். இது அன்றைய மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.அரிசி கழுவிய நீர் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, அதனைக் குடித்தால், உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Health benefits tips rice water is good for dry skin and hair growth

Next Story
சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்… கறுப்பு என்பது வெறுப்பா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express