உலக சுகாதார நிறுவனம், அக்டோபர் 13-ம் தேதியை உலக பார்வை தினமாக அறிவித்துள்ளது.
உலக பார்வை தினம் என்று அறிவிப்பதன் முக்கிய நோக்கம், பொதுமக்கள் மத்தியில் கண் நலம் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்துவதேயாகும்.
இதனைக் கருத்திற்க்கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் கண் மருத்துவர்கள், மருத்துவ சமூகவியலாளர்கள் மற்றும் கண்ணியாலாளர்கள் கண் நலம் பற்றிய செய்திகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் 2010 வருட ஆய்வின்படி உலகம் முழுவதிலும் 285 மில்லியன் பேர் கண் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 246 மில்லியன் பேர் 'லோ விஷன்' என்று சொல்லக்கூடிய மிகக்குறைந்த பார்வை என்னும் குறை பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் இயற்கை முறையில் கண்களைப் பாதுகாப்பது எப்படி என பார்க்கலாம்...
1) ஆரஞ்சு
கோடையினால் நமது உறுப்புகளில் மிகவும் முக்கியமான கண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கோடை காலத்தில் கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள் பார்க்கலாம்.
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும்.
இது கண்களில் ஏற்படக்கூடிய வரட்சியை தடுத்து கண்களைப்பாதுகாக்கின்றது.
2) அவகோடா பழம்
மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது அவகோடா பழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.
கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த அவகோடா மிகவும் பயனுள்ள பழம்.
3) மாம்பழம்
பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. வைட்டமின் சி உள்ளது, இது கண்பார்வைக்கு எதிராக போராட உதவுகிறது மற்றும் அதன் உயர் நீர் உள்ளடக்கம் கண்களை வரட்சியுராமல் வைத்திருக்கிறது.
4) பப்பாளி
எளிதில் கிடைக்கும் பழங்களில் மிக முக்கியமானது பப்பாளி பழம். விலையும் மிக குறைவுதான். இந்த பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளது. இது கண்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
5) உலர் ஆப்ரிகாட் பழம்
ஆப்ரிகாட் பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களை எவ்வகையிலும் பாதிக்காமல், அதன் நீர்ச்சத்துக்களை மட்டும் ஆவியாக்கி உலர வைப்பதால் கிடைப்பது தான் உலர் ஆப்ரிகாட் பழங்கள். இப்பழங்களின் ஊட்டச்சத்துக்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாததினால், மேலும் பலவித நன்மைகளை உலர் ஆப்ரிகாட்களிலிருந்து நீங்கள் பெறலாம். இந்த பழம் கண்களின் வயதை தாமதப்படுத்துவதாக அறியப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.