Advertisment

சுகர் பிரச்னைக்கு தீர்வு... சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு இதை குடியுங்க!

Diabetes: Know about the spice that could help control blood sugar levels: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் சீரகம்; நீரிழிவு நோயாளிகள் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகர் பிரச்னைக்கு தீர்வு... சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு இதை குடியுங்க!

வாழ்க்கை முறை கோளாறுகள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. வாழ்நாள் முழுவதும் தொல்லைத் தரக்கூடிய நீரிழிவு போன்ற பிரச்சனைகள் மிகவும் பரவலாகிவிட்டன. மேலும், நீரிழிவு நோய்க்கு இப்போதெல்லாம் இளம் வயதினர் கூட பாதிக்கப்படுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான உணவை சாப்பிடுவதும் உள்ளூர் உணவை சாப்பிடுவதும் மிக முக்கியம். இது போன்ற வாழ்க்கை முறை பிரச்சனைகளுக்கான தீர்வு உங்கள் சமையலறையில் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா?

Advertisment

பல்வேறு ஆய்வுகளின்படி, பெரும்பாலான இந்திய உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் சீரக விதைகள் அல்லது ஜீரா, நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த, சீரகம் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினியாகவும் அறியப்படுகிறது. சீரகம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுவதாகக் கருதப்படுகிறது, இதன் விளைவாக இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

வகை - 2 நீரிழிவு நோயாளிகளுக்கு கிளைசெமிக் மற்றும் அழற்சி குறியீடுகளில் 50 மற்றும் 100 மி.கி அளவு பச்சை சீரக எண்ணெயின் விளைவை மதிப்பீடு செய்வதற்கான ஒரு 2016 ஆம் ஆண்டின் ஆய்வின் படி, அத்தகைய நோயாளிகளுக்கு க்யூமியம் சைமினம் சப்ளிமெண்ட் (அல்லது சீரகம்) வழங்குவதால் இன்சுலின் சீரம் அளவுகள், உண்ணாநிலையில் இரத்த சர்க்கரை மற்றும் கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் எப்படி குறைகிறது என்று நிறுவப்பட்டது. கூடுதலாக, இந்த நோயாளிகளுக்கு டைப் 2 நீரிழிவு நோயின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தலாம் என்று ஆய்வு குறிப்பிட்டது.

ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், சீரகம் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவியது, இது நீரிழிவுக்கான சாத்தியமான காரணங்களில் ஒன்றாகும்.

publive-image

வல்லுநர்கள் இதை முழு விதை வடிவில் அல்லது தூள் வடிவில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர். வறுத்த சீரகப் பொடி பருப்பு, தயிர் அல்லது சாலட்டில் ஒரு தனித்துவமான சுவையை கொடுக்க சேர்க்கப்படுகிறது. ஒவ்வொரு உணவிற்கும் 30 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் குடிப்பது இரத்த குளுக்கோஸை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது, என, MD மாற்று மருந்து மற்றும் முழுமையான ஊட்டச்சத்து நிபுணரும் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டியுடன் தி கிரேட் இந்தியன் டயட்டின் இணை ஆசிரியருமான டாக்டர் லூக் குடின்ஹோ கூறுகிறார்.

இருப்பினும், நீங்கள் ஏற்கனவே நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், சீரக விதைகளை உட்கொள்வது குறித்து ஒரு கண்காணிப்பை வைத்திருப்பது முக்கியம். ஏனென்றால், சீரக விதைகளை அதிகமாக உட்கொள்வது இரத்த குளுக்கோஸ் அளவை மிகக் குறைவாகக் குறைக்கலாம், இது இரத்தச் சர்க்கரைக் குறைவு என்று அழைக்கப்படுகிறது, இது ஆபத்தான மருத்துவ அவசரநிலைக்கு வழிவகுக்கிறது.

கவனிக்க வேண்டியது என்னவென்றால், சீரகத்தின் கலப்படமான வடிவத்தை உட்கொள்ளாமல் இருப்பது. எனவே இயற்கையான கருப்பு சீரக விதைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். இவை தவிர, சீரகத்தில் நீங்கள் நம்பக்கூடிய பிற நன்மைகளும் உள்ளன. எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி மற்றும் மன அழுத்தம் போன்ற சூழ்நிலைகளையும் சீரகத்தை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எதிர்த்துப் போராட முடியும்.

இருப்பினும், இது குறித்து, குறிப்பாக மனிதர்களுக்கு, அதிக ஆராய்ச்சி தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சீரகத்தின் சிறந்த சப்ளிமெண்ட் மருந்து மற்றும் டோஸ் பற்றி தற்போது தெரியவில்லை, எனவே, இதனை சப்ளிமெண்ட் ஆக இல்லாமல் உணவின் மூலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Diabetes Health Tips Health Benefits Of Cumin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment