பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் சில மாதங்களுக்கு முன்பு ஆரோக்கியமான பானம் தயாரித்து, உடலின் நச்சுத்தன்மையை அகற்றி செரிமானத்தை மேம்படுத்த தினமும் காலையில் உட்கொள்ள வேண்டிய பாணத்தின் குறிப்புகளை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
கபூர் ஒரு இன்ஸ்டகிராம் பதிவில், “தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் விதைகளுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை உட்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த பாணம் “செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் எடை குறைப்புக்கும் உதவும்” என்று அவர் கூறினார். “இது உடலுக்கு ஒரு சிறந்த நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது!” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பாணத்தை எப்படி தயாரிப்பது என்று பாருங்கள்
எலுமிச்சை நீரின் ஆரோக்கிய நன்மைகள்
எலுமிச்சை நீரில் நிறைய ஆரோக்கியத்துகான நன்மைகள் உள்ளன. ஆரம்பத்தில், அது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது. இது வறட்சியான சருமம் மற்றும் தோல் சேதத்திற்கு உதவும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதுமட்டுமில்லாமல், காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் உட்கொண்டால் மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலத்தின் ஒரு கூறு சிறுநீரை அமிலத்தன்மையற்றதாக மாற்றுவதற்கும் சிட்ரேட் சிறு சிறுநீரக கற்களை உடைப்பதற்கும் உதவுவதாக தெரிகிறது. இதனால், அவை உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.
வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள்
வெந்தயம் அல்லது மெத்தியில் உள்ள புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் ஆரோக்கிய நலன்களுக்கு பெயர் பெற்றது. இது ஆக்ஸிஜனேற்றம், ஆன்டிகார்சினோஜெனிக் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது மலச்சிக்கலை நீக்குகிறது, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
உங்கள் தினசரி உணவில் இந்த பானத்தை சேர்ப்பது எப்படி?
தினமும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்துகொள்ளுங்கள். இதை தினமும் சாப்பிட்டு பாருங்கள் அது உங்களுடைய செரிமானத்துக்கும் எடை குறைப்புக்கும் உதவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”