/tamil-ie/media/media_files/uploads/2021/06/orange-guava-759.jpg)
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் வைரஸ் மற்றும் பிற நோய்களைத் தடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். அதை அடைவதற்கான வழிகளில் ஒன்று ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது தான்.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய தாவர அடிப்படையிலான வைட்டமின் சி நிறைந்த சில உணவுகளை பரிந்துரைத்தது. நெல்லிக்காய், ஆரஞ்சு, பப்பாளி, குடைமிளகாய், கொய்யா மற்றும் எலுமிச்சை ஆகியவை இதில் அடங்கும்.
இந்த உணவுகளில் வைட்டமின் சி நிறைந்திருப்பதோடு, பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. எந்த உணவில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதைப் பார்ப்போம்.
நெல்லிக்காய்
2020 ஆம் ஆண்டிற்கான தற்கால மருத்துவ பரிசோதனைகள் தகவல்தொடர்பு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இரத்த திரவத்தை மேம்படுத்துவதற்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் பயோமார்க்ஸர்களைக் குறைப்பதற்கும் நெல்லிக்காய் உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
To get stronger immunity and healthier looking skin, add Vitamic-C rich plant-based foods to your diet from today.#EatRightIndia#HealthForAll#SwasthaBharat#plantbased@MoHFW_INDIA@drharshvardhan@MIB_India@PIB_India@mygovindiapic.twitter.com/ugDw0PlfYq
— FSSAI (@fssaiindia) July 23, 2020
ஆரஞ்சு
ஆரஞ்சு குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, இது சுகாதார நன்மைகளுடன் தொடர்புடையது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. ஹெல்த்லைன் அறிக்கையின் படி, ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தியாமின், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது.
பப்பாளி
ஆரஞ்சு பழங்களைப் போலவே, பப்பாளி பழமும் அதிக நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும், குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளது ஆரஞ்சின் சிறப்பம்சமாகும். ஆரஞ்சு உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் குடல் இயக்கத்தை மென்மையாக்குகிறது. இது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற செரிமான கோளாறுகளை தீர்க்கவும் உதவுகிறது.
குடைமிளகாய்
வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் குடை மிளகாயில் நிறைந்துள்ளது. மேலும், குடை மிளகாயில் வைட்டமின்கள் ஈ மற்றும் ஏ, ஃபைபர், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் அதிக அளவில் உள்ளது. குடை மிளகாயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள இரும்புச் சத்து இரத்த சோகையைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடை மிளகாயில் உள்ள வைட்டமின் சி குடலில் இருந்து இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.
கொய்யா
கொய்யாவில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அவை இரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்துவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும், கொய்யா தசைப்பிடிப்பு போன்ற மாதவிடாயின் வலி அறிகுறிகளையும் போக்க உதவுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எலுமிச்சை
இதேபோல், எலுமிச்சை எடை குறைப்பிறகு உதவுகிறது, மேலும் இதயம் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரின் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரக கற்களை தடுக்கிறது. மேலும் எலுமிச்சை உடலின் பி.எச் அளவை சீராக்கவும் உதவுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.