சளி மற்றும் இருமல் போன்ற பருவகால பிரச்சினைகளுக்கு சந்தையில் ஏராளமான மருந்துகள் மற்றும் சிரப்புகள் கிடைத்தாலும், இயற்கை அல்லது மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சையளிப்பது போன்று சிறந்தது எதுவும் இல்லை. இந்த மூலிகை வைத்தியம் எந்த பக்க விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை. மேலும் நீண்ட காலத்திற்கு ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் உதவுகிறது. இந்த தொற்றுநோய் காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பெரிதாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இது போன்ற பருவகால சிக்கல்களை எளிய முறையில் தீர்க்க அர்ச்சனா தோஷியிடம் ஒரு எளிய கஷாயம் செய்முறை இங்கே உள்ளது, இது பருவகால சிக்கல்களைத் தடுக்க நிச்சயமாக உதவும்.
“துளசி காஷயம் என்பது ஒரு இருமல் மற்றும் சளி இருக்கும் போது நீங்கள் குடிக்கக்கூடிய ஒரு எளிய வீட்டு வைத்தியம் ஆகும். துளசியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மேலும், இந்த மூலிகை தேநீரை நீங்கள் எந்த நேரத்திலும் குடிக்கலாம், ”என்று அர்ச்சனா கூறினார்.
முதன்மையாக இருமல் மற்றும் சளி போன்ற சுவாசப் பிரச்சினைகளை தீர்க்க இந்த எளிய கஷாயம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை அர்ச்சனா குறிப்பிட்டுள்ளார். இந்த கஷாயம் துளசி (புனித துளசி), கருப்பு மிளகு, உலர்ந்த இஞ்சி மற்றும் பனை சர்க்கரை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மூலிகை தேநீர் ஆகும். நீங்கள் சளி அல்லது இருமலால் பாதிக்கப்படுகையில் இந்த மேஜிக் கலவை மிகச் சிறந்தது, ”என்று அர்ச்சனா கூறினார்.
மேலும், “இந்த கஷாயம் சுவாசக் கோளாறுகள், காய்ச்சல், ஆஸ்துமா, நுரையீரல் கோளாறுகள், இதய நோய்கள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. துளசியில் சிறந்த ஆண்டிபயாடிக், கிருமி நாசினி, பூஞ்சைக் கொல்லியாக செயல்படுகிறது. மேலும் துளசியில் உள்ள கிருமிநாசினி கூறுகள் அனைத்து வகையான பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளிலிருந்தும் நம் உடலை மிகவும் திறம்பட பாதுகாக்கிறது. இது முடிவில்லாத அதிசய மற்றும் மருத்துவ மதிப்புகளைக் கொண்டுள்ளது, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் வழிபடப்பட்டு மிகவும் மதிக்கப்படுகிறது, ”என்றும் அர்ச்சனா கூறினார்.
எளிய வீட்டு வைத்தியமான இந்த துளசிக் கஷாயத்தை எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் – 2 கப்
துளசி – சில இலைகள்
கருப்பு மிளகு தூள் – ½ டீஸ்பூன்
உலர்ந்த இஞ்சி தூள் – ½ டீஸ்பூன்
பனை சர்க்கரை – 1 டீஸ்பூன்
செய்முறை
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து, துளசி இலைகளை கிழித்து போடவும். இதை நன்கு கொதிக்க விட வேண்டும்.
* தண்ணீரின் நிறம் சிறிது மாறியதும், கருப்பு மிளகு தூள், இஞ்சி தூள், பனை சர்க்கரை சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
இப்போது சூடான சத்தான துளசி கஷாயம் ரெடி!
அதை எவ்வாறு உட்கொள்வது?
* துளசி காஷாயத்தை சூடாக குடிக்க வேண்டும்.
இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து அதிகபட்ச நிவாரணம் பெற ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பருகுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.