scorecardresearch

சுவாசப் பிரச்னை, இரும்புச் சத்து, இம்யூனிட்டி… இந்த உலர் பழங்கள் ரொம்ப முக்கியம்!

Munching on these dry fruits can help you stay fit: பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பாதாமில் கொழுப்பின் அளவு பூஜ்ஜியம். பாதாம் மலச்சிக்கல், சுவாச பிரச்சினைகள் மற்றும் இதய கோளாறுகள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிப்பதாக அறியப்படுகிறது.

சுவாசப் பிரச்னை, இரும்புச் சத்து, இம்யூனிட்டி… இந்த உலர் பழங்கள் ரொம்ப முக்கியம்!

நாம் உண்ணக்கூடிய பழங்களில் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது என்று நமக்கு தெரியும். அதே போல் நம்முடைய இனிப்பு பண்டங்களில் சுவைக்காக சேர்க்கப்படும் உலர் பழங்களும் அதிகமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. வாருங்கள் எவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதைப் பார்ப்போம்.

பிராந்திய இனிப்புகள் மற்றும் கைவினைப்பொருட்களுக்கான ஆன்லைன் சந்தையான சேல்பாய்.காம் இணை நிறுவனர் பூர்பா கலிதா மற்றும் மொபைல் சேவை சந்தையான அர்பன் கிளாப்பின் உணவியல் நிபுணர் பிரியதாமா ஸ்ரீவாஸ்தவா, நீங்கள் உட்கொள்ளக்கூடிய உலர் பழங்களின் பட்டியலை பரிந்துரைக்கின்றனர்:

பாதாம்

பொதுவாக சர்க்கரை அதிகம் உள்ள வழக்கமான சிற்றுண்டிகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக பாதாம் உள்ளது. மேலும், பாதாமை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. பாதாமில் கொழுப்பின் அளவு பூஜ்ஜியம். பாதாம் மலச்சிக்கல், சுவாச பிரச்சினைகள் மற்றும் இதய கோளாறுகள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிப்பதாக அறியப்படுகிறது. மேலும் முடி, தோல் மற்றும் பற்கள் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவையாக உள்ளது.

முந்திரி

முந்திரியில் ஏராளமான சுகாதார நன்மைகள் உள்ளது. முந்திரி வைட்டமின்கள் ஈ மற்றும் பி 6 ஆகியவற்றின் வளமான மூலமாகும். எனவே இதனை பல்வேறு உணவுகளுக்கு ரிச்சான அமைப்பு மற்றும் சுவையை கொண்டு வர பயன்படுத்தப்படலாம்.

உலர் திராட்சை

உலர் திராட்சை திராட்சைகளில் நீரிழப்பை ஏற்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. உலர் திராட்சை இனிப்பு மற்றும் சுவையான உணவு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இவை ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், அமிலத்தன்மையைக் குறைக்கவும் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகின்றன.

அக்ரூட் பருப்புகள் (வால்நட்)

இந்த அக்ரூட் பருப்புகள் மிகவும் சத்தானதாகும். இதில் முக்கியமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், உணவு இழைகள், புரதங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

பிஸ்தா

பிஸ்தாக்கள் இதயத்திற்கு நல்லது, ஏனெனில் அவை கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. அவை நீரிழிவு நோயைத் தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

பேரீட்சை

பேரீட்சை வெவ்வேறு வகையான இனிப்பு உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இவற்றை தனியாகவும் உட்கொள்ளலாம். பேரீட்சையில் வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் மற்றும் இயற்கை சர்க்கரை ஆகியவை நிறைந்துள்ளன, மேலும் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது. மேலும், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அப்ரிகாட்ஸ் (வாதுமை பழம்)

உங்கள் தினசரி வைட்டமின் ஏ தேவைகளில் 47 சதவிகிதம் அப்ரிகாட்ஸிலிருந்தே கிடைக்கும். அப்ரிகாட்ஸ் பொட்டாசியம், வைட்டமின் ஈ மற்றும் தாமிரத்தின் நல்ல மூலமாகும். இதிலுள்ள வைட்டமின் ஈ, அனைத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின்களையும் (ஏ மற்றும் சி) போலவே, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதங்களிலிருந்து செல்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. சூரியன் வலுவாக இருக்கும் கோடை மாதங்களில் இது மிகவும் முக்கியமானது. இது ஆரோக்கியமான தோல், கண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பங்களிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Health munching dry fruits stay fit healthy