தாய்லாந்துக் காரங்க புத்திசாலிங்க… நீங்களும் உணவில் இதை ஏன் சேர்க்கக் கூடாது?!

Health benefits of lemongrass: நோய் எதிர்ப்பு சக்தியின் அவசியத்தை இந்த கோவிட் -19 நமக்கு உணர்த்தியுள்ளது.

By: Published: July 13, 2020, 7:34:06 AM

Health News In Tamil: ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. இதன் காரணமாக நாம் அனைவரும் சுத்தமான உணவுகளையும் இயற்கையாக கிடைக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளையும் தேடுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியின் அவசியத்தை இந்த கோவிட் -19 நமக்கு உணர்த்தியுள்ளது.

இதுவரை நீங்கள் உங்கள் டயட்டில் அதிக அக்கரை செலுத்தவில்லை என்றால் சில மாற்றங்களை செய்வதற்கான சரியான தருணம் இதுவே. கற்பூர புல் (lemongrass) இதை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.

Health benefits of lemongrass: அது என்ன கற்பூர புல்

இது ஒரு தாவர வகையை சேர்ந்தது. இதன் இலையில் இருந்து கிடைக்கக்கூடிய எண்ணெய் மருந்து தயாரிப்புக்கு பயன்படுகிறது. பெரும்பாலும் தாய்லாந்து உணவு தயாரிப்பில் இது ஒரு பொதுவான பொருளாக சேர்க்கப்படுகிறது. இதை காய்கறி சூப், vegetable stew தயாரிக்க பயன்படுத்தலாம் மேலும் மாமிச உணவு தயாரிப்பிலும் பயன்படுத்தலாம். சுவை கூட்டுவதற்காகவும் கற்பூர புல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெரும்பாலும் மூலிகை தேனீர் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

எவ்வளவு பயன்தரக்கூடியது இந்த கற்பூர புல் ?

* இது செரிமானத்தை சரிசெய்யும் என நம்பப்படுகிறது. நீங்கள் இதை தேனீருடன் எடுத்துக் கொள்ளலாம். வயிற்று வலி காரணமாக ஏற்படும் வயிற்றுப் பிடிப்பை இது அகற்றும்.
* Journal of Agriculture and Food Chemistry என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையின் படி கற்பூர புல்லில் antioxidant பண்புகள் உள்ளன. இந்த antioxidants கள் உடலில் உள்ள free radicals எதிர்த்து போராட உதவும்.
* நீங்கள் ஆரோக்கியமாக மற்றும் பயனுள்ள முறையில் உடல் எடையை குறைக்க விரும்பினால் நீங்கள் கற்பூர புல்லை பயன்படுத்தலாம். இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை (metabolic rate) தூண்டுகிறது மேலும் இது இயற்கையான சிறுநீர் பிரிப்பாக (diuretic) செயல்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியமான அளவு உடல் எடை குறைய உதவுகிறது.
* கற்பூர புல்லில் சில நுண்ணுயிர் கொல்லி (antimicrobial) பண்புகள் உள்ளன. இது வாய்வழி நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும் அவற்றிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது. பல் சொத்தை ஏற்படுத்துகிற பாக்டீரியாவை எதிர்த்து போராடவும் செய்கிறது என முன்பு செய்யப்பட்ட சில ஆய்வுகள் கூறுகின்றன.

எல்லாவற்றையும் போலவே, அதிகப்படியான நுகர்வு எதிர்மறையாகவும் போகக்கூடும். மேலும் இதை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு உங்கள் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் மருத்துவருடன் ஆலோசித்த பிறகு செய்வது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Health tips immunity lemongrass health benefits of lemongrass immunity and health

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X