Health Tamil News: பெண்களுக்கு பாதுகாப்பான கர்ப்பம் இருப்பதை உறுதிப்படுத்த, ஆரோக்கியமான உணவு அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் எதை சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதிக்குமா என்ற கேள்வி உங்கள் மனதுக்குள் உள்ளதா? அது குறித்து கருத்தரிப்பு சிகிச்சை நிபுணரும் எண்டோஸ்கோபிக் அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் சுஷ்மா தோமரைக் கேட்போம்.
Advertisment
கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட வேண்டுமா?
நன்றாக பழுத்த பப்பாளியை சாப்பிடுவதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால், அரை பழுத்த அல்லது பழுக்காத பப்பாளியை கர்ப்ப காலத்தில் சாப்ப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவை லேடெக்ஸ் (என்சைம்கள் அல்லது பப்பாளியிலிருந்து வெளியேறும் வெள்ளை பால் திரவம்) என்ற பொருளைக் கொண்டிருக்கின்றன. இது போஸ்ட்ராக்லாண்டின் (மாறுபட்ட ஹார்மோன் போன்ற விளைவுகளைக் கொண்ட சேர்மங்களின் குழு, குறிப்பாக கருப்பை சுருக்கங்களை அதிகரிக்கும்) சுரப்பியுடன் கருப்பையில் சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கும்.
Advertisment
Advertisements
கவனிக்க வேண்டிய அறிகுறிகள் யாவை?
கருப்பைச் சுருக்கம் காரணமாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு அடி வயிற்றில் வலி ஏற்படக்கூடும்.
கர்ப்ப காலத்தில் பழுத்த பப்பாளி சாப்பிடலாமா?
லேடெக்ஸ் பால் இல்லாத நன்றாக பழுத்த பப்பாளியை மூன்று மாதங்களில் உட்கொள்ளலாம். முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஆபத்தானவை. அதனால், பழுக்காத அல்லது அரை பழுத்த பப்பாளி சாப்பிடுவது கருப்பையில் விரைவாக வலியை ஏற்படுத்தும். அதனால், கர்ப்ப காலத்தில் அதை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் நீங்கள் எவ்வளவு பப்பாளி சாப்பிடலாம்?
நன்றாக பழுத்த பப்பாளி ஒரு கப் போதுமானதாக இருக்கும். கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன உணவுகள் சாப்பிட்டாலும், அவர்கள் ஜீரணிக்கக்கூடிய அளவுக்கு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிக அளவு உணவு சாப்பிட்டால், அஜீரணம் வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"