உடல் சூட்டை தணிக்கும் உணவுகள்!!!

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்

சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். காரணம் அவர்களின் உடல் எப்போதுமே அதிகப்படியான சூட்டை எதிர் கொள்ளவதால் தான். உடலில் நீர் வறட்சி ஏற்படுதல், காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது, அதிக வெப்பதில் அலைவது, கூட்ட நெரிசலான இடத்தில் இருப்பது போன்றவற்றின் காரணமாக உடலில் சூடு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கொடூரமாக உள்ளது. ஒவ்வொருவரும் கோடையின் வெயிலால் மிகுந்த அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உடலைக் குளிர்ச்சிப்படுத்தும் மற்றும் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகம் உண்பது நல்லது.

1. ஆட்டுப்பாலை தினமும் பருகி வந்தால் உடல் சூட்டை விரைவாக குறைத்து விடலாம்.

2. பரங்கிக்காயில் பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது. இதனை கோடையில் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் உடல் வெப்பமும் குறையும்.

3. மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.

4. இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பது சிறந்தது.

5. இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும்.

6. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.

7. நெல்லிக்காய் சாற்றை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.

8. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதுவரை இருக்கும் உணவுப் பொருட்களிலேயே வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது.

9. முக்கியமாக கோடையில் மற்ற காலங்களில் குடிக்கும் நீரின் அளவை விட அதிகமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close