Health tips in tamil: பருவ மாற்றத்தின் போது சளி மற்றும் இருமல் மிகவும் பொதுவாக ஏற்படும் நோய் தொற்றுகளாக உள்ளன. இவற்றில் இருந்து விடுபட நாம் பெரும்பாலும் நீராவி பிடிப்பது மற்றும் வாய் கொப்பளிப்பது போன்ற வீட்டு வைத்தியத்தைத் தேர்வு செய்து வருகிறோம். இந்த தொற்றுகளுக்கு நீங்கள் வேறு சில பயனுள்ள தீர்வுகளை முயற்சிக்க விரும்பினால், மஞ்சள், கருப்பு மிளகு, தேன் போன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களை தேர்வு செய்யலாம் என ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் டிக்ஸா பாவ்சர் பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பதிவில், “நமது சமையலறை முதல் மருந்தகம் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்த பொருட்கள் அனைத்தும் எளிமையாக நமக்கு கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சளி – இருமலை விரட்டும் சிம்பிள் சீக்ரெட்ஸ்களாக டாக்டர் டிக்ஸா பாவ்சர் பரிந்துரை செய்துள்ளவை பின்வருமாறு:-

*ஒரு தேக்கரண்டி மஞ்சள், கருப்பு மிளகு மற்றும் தேன் கலந்த கலவை அன்றாட எடுத்துக்கொள்ளலாம்.
*துளசி நீர்/தேநீர் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை பருகி வரலாம்.
*புளிப்பு பழங்களான ஆம்லா, அன்னாசி, சுண்ணாம்பு, எலுமிச்சை, கிவி போன்ற பழங்களை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.
*7-8 துளசி இலைகள், ஒரு சிறிய துண்டு இஞ்சி, சிறிதளவு பூண்டு, 1 டீஸ்பூன் சோம்பு, 1 டீஸ்பூன் வெந்தயம், மஞ்சள் (உலர்ந்த அல்லது புதியது) மற்றும் 4-5 கருப்பு மிளகு ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இவை பாதியாக சுண்ட விடவும். இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வரலாம்.
*குளிப்பதற்கும் குடிப்பதற்கும் குளிர்ந்த நீரைத் தவிர்க்கவும்.
*செரிமான செயல்பாட்டை ஊக்குவிக்க வெதுவெதுப்பான நீரை குடிக்கவும்.

*தொண்டை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தேன் உதவுகிறது.
*இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை போன்றவற்றில் இருந்து தயார் செய்த தேனீர் அல்லது டீ-யை குடித்து வரலாம்.
*நீராவி பிடிக்கும் போது நன்கு கொதிக்க வைத்த அந்த தண்ணீரில் சிறிதளவு சோம்பு, யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது மஞ்சள் சேர்க்கவும்.
*சூடான பாலுடன் மஞ்சள் சேர்த்து பருகி வரலாம்.
*தொண்டை புண் ஏற்பட்டால் அதிமதுரம் கஷாயம் அல்லது வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கவும்.
*துளசி இலைகள் அல்லது அவற்றின் தண்ணீரை பருகி வரலாம்.
“உங்கள் எடை மீது கவனம் செலுத்துபவராக இருந்தால் வறுத்த, பழமையான மற்றும் தெருமுனை கடைகளில் கிடைக்கும் உணவுகளை தவிர்க்கலாம்” என டாக்டர் டிக்ஸா பாவ்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil