healthy food in tamil: இயற்கைக்கு நன்றி கூறும் வகையிலும், எந்த பாகுபாடும் இல்லாமலும் அனைவரும் உற்சாமாக கொண்டாடும் ஒரு விழாவாக பொங்கல் விழா உள்ளது. ‘தைப் பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள். இந்த தை மாதத்தில் நமது விவசாயிகள் நெல் அறுவடை செய்வார்கள். அந்த புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட அரிசி, வயல் வெளிகளில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள், கிழங்குகள் போன்றவற்றை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள்.
மேலும், இந்த மகிழ்ச்சி பொங்கும் பண்டிகை காலத்தில் பலவிதமான உணவுகள் தயார் செய்யப்படும். அப்படி சமைக்கப்படும் ஒவ்வொரு உணவும், சுவை மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியவையாகவும் இருக்கும். இப்போது அந்த சுவைமிகுந்த உணவுகளை பற்றி நாமும் தெரிந்துகொள்வோம்.

சத்துக்களை அள்ளித் தரும் கிழங்கு வகைகள்
பொங்கல் விழாவின்போது சிறு கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பிடி கிழங்கு, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வாழைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், வெள்ளை பூசணி, பூசணிக்காய், சவ் சவ், தக்காளி போன்ற காய்கறிகளைக் கட்டாயம் சமையலில் சேர்ப்பார்கள். இவை அனைத்திலும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் நிரம்பி காணப்படுகின்றன.
சுவையுடன் ஆரோக்கியம் தரும் பொங்கல்<
பச்சரிசி, வெல்லம், நெய், திராட்சை, முந்திரி போன்றவற்றைக் கலந்து தயார் செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் பல சத்துக்கள் கொண்டது. பச்சரிசியில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. தவிடு நீக்கி, பாலிஷ் செய்யாத அரிசி பல சத்துக்களை உள்ளடக்கியுள்ளன.
இதேபோல், பொங்கலுக்கு சுவையூட்டும் வெல்லத்தில் போலேட், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இவை அனைத்தும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியமானவை ஆகும். இந்த சத்துக்கள் மாதவிடாயின்போது ஏற்படும் வலியை நீக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. மேலும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடை குறைக்கவும் உதவுகின்றன.
நெய் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாக உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் பார்வைத்திறனை மேம்படுத்தவும், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும், தசைகளின் வலிமை மற்றும் சருமப் பொலிவை அதிகரிக்கவும் உதவுகின்றன.
திராட்சை, முந்திரி போன்றவற்றில் இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
பொங்கல் திருநாளன்று பனங்கிழங்கை சுட்டும், வேகவைத்தும் சாப்பிடுவார்கள். அதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள பொங்கலை, பொங்கல் திருநாளன்று நாமும் சுவைத்து மகிழ்வோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“