Healthy Food News in tamil: எடை அதிகரிப்புக்கு பயந்து கொழுப்பு நிறைந்த உணவை உட்கொள்வதிலிருந்து நீங்கள் விலகி இருக்கிறீர்களா? நீங்கள் உண்ணும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உண்மையில் ஆரோக்கியமற்றவையா? அவை இதயத்தை பாதிக்கிறதா? இதுபோன்ற கேள்விகள் உங்கள் மனதில் கண்டிப்பாக இருக்கும். இந்த குழப்பங்கள் நிறைந்த கேள்விகளுக்கும், கட்டுக்கதைகளுக்கும் ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“கொழுப்பு அதிகம் நிரம்பி காணப்படும் உணவுகளை சாப்பிடுவது உங்கள் உடலை கொழுப்பு நிறைந்த ஒன்றாக மாற்றாது. ஆனால் தவறான வகையான கொழுப்பை சாப்பிடுவது அல்லது அதிக கொழுப்பு உணவை சாப்பிடுவது உங்களது உடலில் கொழுப்பை அதிகரிக்கும். கொழுப்புகள் நமது உடலுக்கு அவசியமான ஒன்று. இதய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்தாலும், அவற்றை சரியான அளவு மற்றும் தரத்தில் உட்கொள்ளப்பட வேண்டும்.
நல்ல கொழுப்புகள் என்றால் என்ன?
இயற்கையிலிருந்து வரும் இயற்கை உணவுகளில் நல்ல கொழுப்புகள் உள்ளன. இந்த இயற்கை உணவுகளில் இருந்து பெறப்படும் கொழுப்புகளில் பாலி மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. "சரியான கொழுப்புகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன, குடலை தூண்டுகின்றன, பசியைக் குறைக்கின்றன, மற்றும் உடலை மேம்படுத்துகின்றன. மேலும் டைப் 2 நீரிழிவு நோயை ரிவர்ஸ் ஆக மாற்றி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன" என்று ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா கூறுகிறார்.
உங்கள் மோசமான கொழுப்பை எல்.டி.எல் குறைப்பதன் மூலமும், உங்கள் நல்ல கொழுப்பை எச்.டி.எல் அதிகரிப்பதன் மூலமும், ட்ரைகிளிசரைடுகளையும், இரத்த அழுத்தத்தையும் கொழுப்புகள் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழுப்புகள் ஏன் தேவை?
உங்கள் உடலால் கொழுப்பு அமிலங்களை தயாரிக்க முடியாது. மேலும் நல்ல கொழுப்புகள் அத்தகைய கொழுப்பு அமிலங்களின் மூலமாக செயல்படுகிறது. நம்முடைய மூளை பெரும்பாலும் கொழுப்புகளால் ஆனது. மற்றும் அவை ஒழுங்காக செயல்பட கொழுப்புகளின் நிலையான ஓட்டம் தேவைப்படுகிறது. இந்த வகை கொழுப்பின் மிகப்பெரிய பகுதி ஒமேகா 3 கொழுப்புகளிலிருந்து வருகிறது. இது டிஹெச்ஏ என்றும் அழைக்கப்படுகிறது. மற்றும் இவை செல்களிடையே எளிதாக இயக்க தேவைப்படுகிறது. நல்ல தரமான கொழுப்புகளை எளிதாக அணுகுவது அறிவாற்றல், மகிழ்ச்சி, கற்றல் மற்றும் நினைவகத்தை அதிகரிக்கும்.
"ஆய்வுகளின் படி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் குறைபாடு, மனச்சோர்வு, பதட்டம், இருமுனை கோளாறுகள் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா ஆகியவற்றுடன் இணைக்கின்றன. சீரான ஹார்மோன்களுக்கு போதுமான கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடலில் ஏற்படும் கொழுப்பு குறைபாடு மலட்டுத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கும், ”என்றும் ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா கூறுகிறார்.
குறிப்பாக, வைட்டமின் ஏ, டி, கே மற்றும் ஈ ஆகியவற்றின் கொழுப்புகள் எளிதில் கரையக்கூடியவை. உடல் இந்த வகை கொழுப்புகளை அவற்றின் உறிஞ்சுதலுக்கு எடுத்துக்கொள்கிறது. எனவே இந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு குடலுக்கு சில கொழுப்பு உணவுகள் தேவைபடுகின்றன.
எவ்வளவு கொழுப்பு வேண்டும்?
நீங்கள் தினசரி உட்கொள்ளும் உணவில் 20 சதவீதம் கொழுப்பு இருக்க வேண்டும். தோல், முடி, மூளை, இதய செயல்பாடு, மற்றவர்களிடையே உடல் வெப்பநிலையை சீராக்க கொழுப்புகள் தேவை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil