Healthy food tamil news: நம்முடைய உடலில் ஊட்டச்சத்து குறைந்து காணப்படுவது பல நோய்களுக்கு வழி வகுக்கும். எனவே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருளாகவும், ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் பொருளாகவும் உள்ள கருப்பு கொண்டைக்கடலை உள்ளது. அவற்றை தினசரி நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான புரத மற்றும் இரும்புச் சத்துக்கள் கிடைக்கும். அதோடு கருப்பு கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக காணப்படுகிறது. மற்றும் இவை உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
கருப்பு கொண்டைக்கடலையின் நன்மைகள்
* கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமான அமைப்பில் ஜெல் போன்ற பொருளை உருவாக்குவதன் மூலம் பித்தத்தை வெளியேற்ற உதவுகிறது.
*கருப்பு கொண்டைக்கடலை எல்.டி.எல் கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
*இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடானது, இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க வழிவகுக்கிறது.
* கருப்பு கொண்டைக்கடலை இரும்புச்சத்து நிறைந்ததாகவும், இரத்த சோகையைத் தடுக்கும் ஒன்றாகவும் மற்றும் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
*தினந்தோறும் காய்கறிகளை சாப்பிட்டு உங்களுக்கு அலுப்பு ஏற்பட்டால், அவற்றுக்கு பதிலாக கருப்பு கொண்டைக்கடலைகளை சமைக்கும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
* கருப்பு கொண்டைக்கடலையை முளைகட்டி சாலட்டாக உட்கொள்ளலாம். அதற்கு நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து மீண்டும் நன்றாக கலக்கவும். இப்போது நீங்கள் அந்த சாலட்டை உண்ணலாம்..
*கருப்பு கொண்டைக்கடலையை இன்னும் சுவையாக செய்ய, கொஞ்சம் மென்மையாக வரும் வரை வேகவைக்கவும். ஒரு வாணலியில், சிறிது எண்ணெய், சீரகம், இஞ்சி, மிளகாய் சேர்த்து சிறிது வெங்காயம், தக்காளியோடு வதக்கவும். பின்னர் அதில் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். அதன் பின்னர் உலர்ந்த மசாலாவை உங்கள் சுவைக்கு ஏற்ப சேர்க்கவும். 20 நிமிடங்கள் சமைத்து சூடான ரொட்டிஸ் அல்லது உணவோடு சேர்த்து சாப்பிடலாம்.
* இன்னும் சுவையை கூட்ட கேரட், ஸ்பிரிங் வெங்காயம், பூண்டு வெண்ணெய் அல்லது மயோனைஷ் ஆகியவற்றோடு காப்சிகம் சேர்த்து வதக்கவும். அதோடு சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்துக்கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil