Healthy food Tamil News: தென்னிந்திய உணவுகளில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடம் உண்டு. நம்முடைய பெருபாலான உணவுகளில் கறிவேப்பிலையை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நம்மில் சிலரோ கறிவேப்பிலையை உண்ணாமல் ஒதுக்கி வைத்தே வருகிறோம். மேலும் சிலருக்கு கறிவேப்பிலை உணவில் இருந்தால் கோவம் தான் எழுகிறது.
உண்மையில் கறிவேப்பிலையின் ஆரோக்கியமான பயன்கள் குறித்து அறிந்தால், அவற்றை ஒதுக்கவோ, கோவமோ பட மாட்டோம். அவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய ஒரு உணவு பொருளாக கறிவேப்பிலை உள்ளது.
இப்படிப்பட்ட கறிவேப்பிலையை உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக மாற்றுவது எப்படி என்பது குறித்து ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பாவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தின்தோறும் காலையில் தேநீருடன் 7 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டு வந்தால், முடி உதிர்தலைக் குறைப்பதோடு, நரை முடியைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
நீங்கள் அவற்றை மென்று சாப்பிடலாம், பின்னர் சிறிது தண்ணீர் குடிக்கலாம் அல்லது இலைகளை ஒரு கப் தண்ணீரில் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வேகவைத்து கசக்கி, இளஞ்சூடாக இருக்கும்போது குடிக்கலாம். முடி ஆரோக்கியத்தைத் தவிர இது பல குறைபாடுகளுக்கும் உதவுகிறது. மேலும் கீழ்காணும் பிரச்சனைகளுக்கும் கறிவேப்பிலை தீர்வாகிறது.
குமட்டல்
ஆறு புதிய கறிவேப்பிலைகளை கழுவி உலர்த்தி பின்னர் அரை டீஸ்பூன் நெய்யுடன் வறுத்தெடுக்கவும், ஆறிய பின் அவற்றை மென்று சாப்பிட குமட்டல் நிற்கும்.
வாய் துர்நாற்றம்
ஐந்து கறிவேப்பிலைகளை ஐந்து நிமிடங்கள் மென்று பின்னர் தண்ணீர் கொண்டு வாயை கழுவ வாய் துர்நாற்றம் நீங்கும்.
வயிற்றுப்போக்கு
30 இலைகளை அரைத்து, மோருடன் கலந்து சாப்பிட வயிற்றுபோக்கு சரியாகும்.
நீரிழிவு நோய்
துவையலாக அரைத்து சப்பாத்தி மற்றும் சோறு போன்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம்.
வாய்ப்புண்கள்
கறிவேப்பிலையை தூள் செய்து அதனுடன் தேன் கலந்து வாய் புண் மீது தடவ வாய்ப்புண் சரியாகும். கறிவேப்பிலையானது 2-3 நாட்களில் ஸ்டோமாடிடிஸை நீக்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)