இம்யூனிட்டிக்கு இதுதான் பெஸ்ட்: சோளம், முருங்கை இலை பயன்படுத்துவது எப்படி?

Immunity boosters tamil news: முருங்கை இலையோடு சோளம் சேர்த்து சாப்பிட்டால் இம்யூனிட்டி அதிகரிக்கும். மற்றும் இரத்த ஓட்டம் சீராகும்.

Healthy food tamil news: முருங்கை இலை இரும்புச்சத்து நிறைந்து காணப்படக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். முருங்கை இலையை பொடி செய்து வெந்நீருடன் கலந்து தேநீர் போல அருந்தி வரலாம். முருங்கை இலையின் சாறை பிழிந்து 10 மில்லி பருகினால் வயிற்று பிரச்னை நீங்கும். மற்றும் முருங்கை இலையை நன்றாக வதக்கி உணவுவின்போது சாப்பிடலாம். இப்படி நிறைய நன்மைகள் உள்ள முருங்கை இலையோடு சோளம் சேர்த்து சாப்பிட்டால் இம்யூனிட்டி அதிகரிக்கும். மற்றும் இரத்த ஓட்டம் சீராகும்.

சோளம், முருங்கை இலை உள்ள இந்த உணவை எப்படி தயார் செய்வது என்பது பற்றி இங்கு சிறிய தொகுப்பு வழங்கியுள்ளோம்.

தேவையான பொருட்கள்

1 கப் சோளம் தினை முத்துக்கள் – வேகவைத்தது
1 நடுத்தர அளவு உருளைக்கிழங்கு – வேகவைத்து க்யூப்ஸில் வெட்டப்பட்டது
1 பச்சை மிளகாய் – நறுக்கியது
1 சிதளவு இஞ்சி (அரைத்து )
1 பெரிய தக்காளி – நறுக்கியது
1 டீஸ்பூன் வறுத்த சீரகம்
½டீஸ்பூன் – சிவப்பு மிளகாய் செதில்களாக
¼ டீஸ்பூன்- கருப்பு மிளகு தூள்
உப்பு – தேவையான அளவு
2டீஸ்பூன் – எலுமிச்சை சாறு
1சிட்டிகை மஞ்சள்
சிறிதளவு புதிய புதினா

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் சோள திணை முத்துக்களை நன்றாக அலச வேண்டும். பின்னர் அவற்றை முந்தைய இரவில் குறைந்தது 8-10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பிறகு மீண்டும் தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். பின்னர் குக்கரில் 2-3 கப் தண்ணீர் சேர்த்து, அதோடு ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும். குக்கரில் இரண்டு விசில்கள் வரும் வரை சுமார் 10 நிமிடங்கள் இளங்கொதிப்பாக வேக வைக்கவும். பிறகு வெப்பத்தை குறைத்து, குக்கரில் உள்ள அழுத்தத்தை இயற்கையாக வெளியிட அனுமதிக்க வேண்டும்.

குக்கர் குளிர்ந்த பிறகு, சோள திணை முத்துக்கள் போதுமான அளவு மென்மையாகவும், மெல்லிய அமைப்பையும் கொண்டிருப்பதைக் காண்பீர்கள். இப்போது, ​​ஒரு ஆழமான பாத்திரத்தில், வேகவைத்த சோள திணை, நறுக்கிய தக்காளி, உருளைக்கிழங்கு க்யூப்ஸ், அரைத்த இஞ்சி மற்றும் இறுதியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். இப்போது, ​​எலுமிச்சை சாறுடன் அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து, நன்றாக கலக்கவும். பின்னர் அதை புதிய புதினா இலைகளால் அதை அலங்கரிக்கவும்.

உங்கள் சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு மற்றும் மசாலாப் பொருட்களை சேர்த்துக்கொள்ளவும். இந்த சாட் ஒரு விரைவான சிற்றுண்டியாகவும் காலை உணவுவாகவும் சாப்பிடலாம்.

இவற்றோடு ஒரு கிளாஸ் மோர் சேர்த்தும் பருகலாம். உங்கள் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இவற்றோடு சில முருங்கை இலைகளின் தூளை சேர்த்துக்கொள்ளலாம்.

நன்மைகள்

சோளம் ஒரு நல்ல அளவு நார்ச்சத்தாக இருப்பதால், இது செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் ஏற்படும் வீக்கம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளைத் தடுக்கிறது. புரதம் மற்றும் பிற தாதுக்கள் அதிகம் காணப்படுவதால் முதிர்ச்சியடையும் வயதைத் தடுக்கிறது.அதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முருங்கை இலையில் ஆரஞ்சை விட ஏழு மடங்கு அதிக வைட்டமின் சி, கேரட்டை விட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ, பாலை விட 17 மடங்கு அதிக கால்சியம், தயிரை விட ஒன்பது மடங்கு அதிக புரதம், வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம் மற்றும் கீரையை விட 25 மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது. ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக அறியப்படும்முருங்கை இலை தூள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்தாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy food tamil news immunity boosters sorghum millet and moringa buttermilk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com