scorecardresearch

முருங்கைக் காயை விட இரும்புச் சத்து அதிகம்: சுண்டைக்காயை மிஸ் பண்ணாதீங்க!

Sundakkai benefits Tamil News: துருக்கியின் பெர்ரி என அழைக்கப்படும் சுண்டைக்காய் உட்கொள்வது அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை புண்கள் போன்ற பல குடல் பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது.

Healthy food Tamil News: sundakkai tamil recipe, and sundakkai benefits

Healthy food Tamil News: கசப்பு தரும் உண்வுப்பொருட்களில் தான் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் இந்த தொகுப்பில் நாம் காணவுள்ள உணவு பொருள் கசப்புடன் உவர்ப்பு கூடியதாகவும், முருங்கைக் காயை விட இரும்புச் சத்து  மிகுந்து காணப்படும் பொருளாககவும் உள்ள சுண்டைக்காய் பற்றி தான். 

பல பெயர்களில் அழைக்கப்படும் சுண்டைக்காயை பல வழிகளில் நம்முடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம். வெறும் சுண்டைக்காய்களை பறித்து கறி போன்று சமைக்கலாம். அல்லது நன்கு காயவைத்த சுண்டைக்காயை, சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுத்து மோருடன் மிக்ஸ் செய்து சாப்பிடலாம். மேலும் நன்கு வறுக்கப்பட்ட  சுண்டைக்காயை வத்தக்குழம்பில் இட்டு ருசித்து மகிழலாம். 

சுண்டைக்காயின் நன்மைகள் 

துருக்கியின் பெர்ரி என அழைக்கப்படும் சுண்டைக்காய் உட்கொள்வது அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை புண்கள் போன்ற பல குடல் பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது. 

சுண்டைக்காயை நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால், அவை இரத்த சோகையின் அறிகுறிகளை பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் அவற்றில் காணப்படும் அடர்த்தியான இரும்புச் சத்து இதற்குக் காரணமாக அமைகிறது. 

சுண்டைக்காயில் காணப்படும் பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களைத் தடுக்கிறன. 

சுண்டைக்காயில் ஃபிளவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெருமளவில் இருப்பதால், பல்வேறு இருதய நோய்களைத் தடுக்கவும், பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. 

சுண்டைக்காய் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் யூரிக் அமிலத்தை அழிக்க உதவுவதால், பல்வேறு சிறுநீரக நோய்களைத் தடுக்கிறது.

பார்க்க சிறிய பொருளாக தென்படும் சுண்டைக்காய், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மருந்தாக செயல்படுகிறது. இது ஊட்டச்சத்து நிறைந்த அணுகுண்டாகவும் உள்ளது என்றால் ஆச்சரியப்படார் எவரும் இல்லை.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Healthy food tamil news sundakkai tamil recipe and sundakkai benefits

Best of Express