Beetroot Pachadi in tamil: நலம் தரும் காய்கறிகளில் பீட்ரூட்க்கு என தனி இடம் உண்டு. இவற்றில் இரும்புச் சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன. இவை ரத்த சிவப்பு அணுக்களை சரிசெய்யவும், அவற்றை மீண்டும் செயல்படுத்தவும் உதவுகின்றன.
இதனால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும். கேரட், ஆரஞ்சு மற்றும் நெல்லிக்கனி சாறுகளை விட பீட்ரூட் சாறு ஏராளமான பயங்களித்தருகிறது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட் சாறு பருகி வந்தால், இரத்த அழுத்தத்தம் கட்டுக்குள் வரும். குடலில் ஏற்ப்படும் செரிமானப் பிரச்சனையையும் நீக்கும்.
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பீட்ரூட்டில் அட்டகாசமான பச்சடி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
பீட்ரூட் பச்சடி செய்யத் தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2 துருவியது
தேங்காய் துருவல் - அரை கப்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
தயிர் - அரை கப்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
பீட்ரூட் பச்சடி சிம்பிள் செய்முறை
ஒரு பாத்திரம் எடுத்து அதில் துருவிய பீட்ரூட், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பிறகு, துருவிய தேங்காய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
அதன் பின், இவற்றை பீட்ரூட் உடன் சேர்த்து கிளறவும். இவற்றை சுமார் 7 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
இவை, நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும் தயிர், உப்பு சேர்த்து கிளறவும். இவை கொதித்து வருவதற்கு முன்பு அடுப்பை அணைத்து கீழே இறக்கி விடவும்.
இதன்பிறகு, ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பீட்ரூட்டை சேர்க்கவும்.
இப்போது நீங்கள் எதிர்ப்பார்த்த சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் பச்சடி ரெடியாக இருக்கும். இவற்றை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.