Coconut Rice With Peas Recipe tamil: நம்முடைய அன்றாட சமையலில் சில வித்தியாசமான உணவுகளை தயார் செய்ய நாம் நினைப்பதுண்டு. அந்த வகையில், பச்சை பட்டாணி தேங்காய் சாதம் முற்றிலும் வித்தியசமான ஒன்று. தேங்காய் சாதம் தயார் செய்வதுபோல் இதற்கான தயாரிப்பு நேரம் குறைவு தான். பள்ளி, கல்லூரி, வேலைக்கும் செல்பவர்களுக்கு மதிய உணவாக இந்த பச்சை பட்டாணி தேங்காய் சாதத்தை செய்து கொடுக்கலாம்.
பச்சை பட்டாணி தேங்காய் சாதம் தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1½ கப்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
பச்சை பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 6 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு.
பச்சை பட்டாணி தேங்காய் சாதம் செய்முறை
முதலில் ஒரு அடுப்பில் பச்சரிசியை உதிர் உதிராக வேக வைத்து தனியாக இறக்கி வைக்கவும்.
இதற்கிடையில், பச்சை பட்டாணியை அரைமணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
தொடர்ந்து, ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு போட்டு தாளித்து கொள்ளவும்.
பிறகு தேங்காய்த்துருவல், உப்பு, வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
இதன்பின்னர், அதில் வேக வைத்த சாதத்தைச் சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி உலர் திராட்சை, கொத்தமல்லித்தழை தூவி நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான மற்றும் சுவையான பச்சை பட்டாணி தேங்காய் சாதம் தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.