Healthy foods in tamil: தென்னிந்திய உணவுகள் இந்தியாவின் வசதியான உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது. சூடான இட்லிகள், மிருதுவான தோசைகள், இறகுகள் நிறைந்த ஆப்பம்கள், மொறுமொறுப்பான வடைகள் என பல சுவையான உணவுகள் உள்ளன. இந்த உணவு வகைகளை தயாரிப்பதில் அரிசி மற்றும் பருப்பு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அவை ஒன்றாக அரைக்கப்பட்டு ஒரே இரவில் புளிக்கவைக்கப்படுகின்றன.
இந்த மாவுகளை தயாரிக்க பொதுவாக இரண்டு வகை அரிசியை( பச்சை அரிசி அல்லது புழுங்கல் அரிசி) நாம் பயன்படுவது உண்டு. இவை இரண்டிலும் இட்லி, தோசை போன்ற உணவுகளை தயார் செய்யும் போது சில வேறுபாடுகள் இருப்பதை நாம் காணலாம்.

இது குறித்து சமீபத்தில், உணவு ஆராய்ச்சியாளர் ஸ்வேதா சிவக்குமார், இரண்டையும் ஒப்பிட்டு ஒரு தனித்துவமான பரிசோதனையை நடத்தியுள்ளார். அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து இருந்தார். அவற்றை இப்போது பார்க்கலாம்.
இந்த ட்வீட்களை ஸ்வேதா சிவகுமார் தனது @Upgrade_My_Food என்ற ஹேண்டில் பகிர்ந்துள்ளார். இந்த தனித்துவமான சோதனையானது ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும், நூற்றுக்கணக்கான கருத்துகளையும், மறு ட்வீட்களையும் பெற்றுள்ளது. அந்த பதிவில் ஸ்வேதா புழுங்கல் அரிசியைப் பயன்படுத்துவதற்கும், பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட இட்லி மாவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதாக விளக்கியுள்ளார்.
முதலில், சிவக்குமார் அரிசியின் இரண்டு வகைகளையும் ஊறவைத்தார், பின்னர் இரண்டு வகைகளையும் அரைக்க ஒரே விகிதத்தில் உளுத்தம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தினார். புழுங்கல் அரிசியுடன் செய்ததை ஒப்பிடும் போது பச்சரிசி மாவு மிருதுவாக இருப்பதை அவர் கவனித்துள்ளார்.
அடுத்து, இரண்டு வகைகளையும் புளிக்கவைத்து, பச்சரிசி இட்லி மாவு புளிக்க அதிக நேரம் எடுப்பதைக் குறிப்பிடுகிறார். இட்லி மற்றும் தோசை மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் போது, புழுங்கல் அரிசியில் இட்லி பஞ்சுபோன்று தோசை, மறுபுறம், பச்சை அரிசி மாவுடன் செய்யப்படும் போது மிருதுவாகவும் சுவையாகவும் இருந்தது என்று அந்த பதிவில் ஸ்வேதா தெரிவிக்கிறார்.
The Experiment:
— Swetha Sivakumar (@Upgrade_My_Food) December 10, 2021
Make 2 batters -> 1 made with urad dal + parboiled rice, the other with urad dal + raw rice.
Observe the differences in the resultant batter, idli and dosa made from these 2 types.
Step 1: Soak pic.twitter.com/VJjScIUs62
Conclusions:
— Swetha Sivakumar (@Upgrade_My_Food) December 10, 2021
Batter
Parboiled rice batter ferments quickly and more easily compared to raw rice batters
Idli
Idli rises better, has more spring and is poofier, when made with parboiled rice compared to raw rice
Dosa
Dosa made with raw rice batter is crispier and tastier.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“