Healthy Soup Tamil: உடலுக்கு நன்மை பயக்கும் கீரை வகைகளில் அகத்திக் கீரையும் ஒன்று. இந்த அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையதாக உள்ளது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும்.
இவ்வளவு மருத்துவ குணமுள்ள அகத்தி கீரையில் சூப் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அகத்தி கீரை – 1 கப்
மிளகு தூள் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – டேபிள் ஸ்பூன்
பூண்டு – 4
வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
அகத்திக்கீரை சூப் செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 3 முதல் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். அவை சூடானதும் அதில் நன்கு அலசி நறுக்கி வைத்துள்ள அகத்திக்கீரையை சேர்த்து மிதமான சசூட்டில் கொதிக்க வைக்கவும்.
இதற்கிடையில், ஒரு மிக்சி எடுத்து அதில் மிளகு, சீரகம் பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
இந்த அரைத்த மசாலாவை கொதித்துக்கொண்டு இருக்கும் கீரையில் சேர்த்து மிக்ஸ் செய்யவும். பிறகு தனலை அதிகப்படுத்தி கொதிக்க விடவும். விரும்பினால் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும்.
கீரை கொதிக்க 5 முதல் 6 நிமிடங்கள் போதுமானது. மறக்காமல் மூடியால் நன்கு மூடவும்.
கொதித்த சூப்பில் உள்ள கீரையை வடிகட்டிவிட்டு, சிறிதளவு உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து பரிமாறி மகிழவும்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“