Healthy Thuthuvalai Thuvaiyal in tamil: நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பொருளாக உள்ள தூதுவளை வாதம், பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக உள்ளது. அப்படிப்பட்ட இந்த தூதுவளையில் சட்னி எப்படி தாயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
தூதுவளை சின்ன வெங்காயம் - 10 - 15 கொத்தமல்லி கருவேப்பிலை காய்ந்த மிளகாய் புளி தேங்காய் துருவல் கடலை பருப்பு உளுந்தம் பருப்பு எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியவை
Advertisment
Advertisements
முதலில் ஒரு காடாய் எடுத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் கடலை மற்றும் உளுந்தம் பருப்புகளை சேர்த்து மிதமான சூட்டில் வறுத்துக்கொள்ளவும். தொடர்ந்து காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கியதும், தூதுவளை சேர்க்கவும். அவை வதங்கியதும், கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கிளறவும். பிறகு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி கீழே இறக்கவும்.
இப்போது மிக்சி எடுத்து இந்த கலவையுடன் உப்பு சேர்த்து சட்னிக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும். அரைத்த பிறகு அவற்றை அப்படியே துவையலாகவும் எடுத்துக்கொள்ளலாம். சட்னியாக தண்ணீர் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“